இன்றைய ராசி பலன்கள் ( 02 மார்ச் சனிக்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 02 மார்ச் சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 02ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் இலட்சியங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள். உங்களின் திறமையான செயல்பாட்டிற்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று போதிய அளவு பணம் சம்பாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில் இன்று பண வரவு காணப்படும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பயணங்கள் ஏற்படலாம். உங்கள் திறமையான தவகல் தொடர்பு மூலம் நற்பலன்களைப் பெறலாம். இன்று பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றத்தினால் நன்மை கிடைக்கும். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதனால் உங்கள் சௌகரியங்கள் அதிகரிக்கும். இன்று உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிபீர்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் பணிகளை முடிப்பதை சற்று கடினமாக உணர்வீர்கள். யதார்த்த அணுகுமுறையை கையாள வேண்டும். செயல்களின் விளைவுகள் சிறப்பாக அமைவதற்கு அமைதியாக யோசித்து செயல்படவும். நிலுவையில் உள்ள பணிகளால் தாமதம் ஏற்படும். எனவே திட்டமிட்டு முறையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதிகரிக்கும் செலவுகள் கவலையை அளிக்கும். அதனைச் சுமையாக உணர்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். பொறுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நல்ல விளைவுகளைக் காண திட்டமிடல் வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரலாம். அதிக வேலைப் பளுவை சாமார்த்தியமாக திட்டமிட்டு ஒழுங்கமைக்கவும். இன்று போதிய அளவு பணம் சம்பாதிப்பதை கடினமாக உணர்வீர்கள். வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.பல விஷயங்களை சாதிப்பதற்கு இன்று உகந்த நாள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் தனித்திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது. அந்தப் பணம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். இறைவனின் ஆசிகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று உங்கள் செயல்களை நிர்வகிக்க நீங்கள் திறமையுடன் யோசிக்க வேண்டும். குடும்பப் பிரச்சினைகளும் அதிகரிக்கும் பொறுப்புகளும் கவலையை அளிக்கும். பாதுகாப்பின்மை உணர்வை தவிர்க்க வேண்டும். பிரார்த்தனை மூலம் ஆறுதல் பெறலாம். அதிகரிக்கும் பணிகள் காரணமாக பணியிடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும். பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திட்டமிட்டு பணியாற்றுவது சிறந்தது. இன்று நிதிநிலைமையில் அனுகூலமான வளர்ச்சி காணப்படாது. இன்று மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு சரியான செயலுக்கும் தவறான செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிய படிப்பினையை அளிக்கும். உங்களுடைய இலக்குகளை இன்று சரியாக திட்டமிட வேண்டியது அவசியம். உங்கள் மேலதிகாரிகளுடன் சில விரும்பத்தாகத சூழ்நிலைகள் ஏற்படும். நீங்கள் அமைதியாக அந்தச் சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டும். இன்று பண வரவிற்கான வாய்ப்பு இல்லை. பண இழப்புகளை தவிர்க்க நீங்கள் கையிலிருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும். இதன் மூலம் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று துடிப்பான நாளாக இருக்காது.உற்சாகம் குறைந்து காணப்படும். மனதில் குழப்பங்கள் காணப்படும். இன்று எடுக்கும் முடிவுகள் சீரற்றதாக இருக்கும். பணியில் வளர்ச்சி குறைந்து காணப்படும். அதிகப் பணிகள் காரணமாக இன்று நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட வேண்டும். இன்று நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. எதிர்கால பாதுகாப்பு கருதி நீங்கள் ஒரு கணிசமான தொகையை சேமிக்க வேண்டும்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது. பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிக்கான பலன் கிடைக்கும். உங்கள் செயல்திறன் காரணமாக கீர்த்தி பெறுவீர்கள். உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும். குடும்ப நலனுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். இன்று முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வது சிறந்தது. உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். உங்களின் இந்தப் போக்கின் காரணமாக உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இன்று சேமிக்கும் ஆற்றல் பெருகும். இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

கும்பராசி அன்பர்களே!

உங்கள் அன்றாடப் பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை. இன்று ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று அதிகப் பணிகள் காரணமாக உங்கள் பணியில் தடைகள் நிச்சயம் ஏற்படும். இன்று கூடுதல் செலவுகள் செய்ய நேரும். அதனால் உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும்.

மீனராசி அன்பர்களே!

இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைவதில் பல தடைகள் காணப்படும். கவலைகளை ஒதுக்கிவிட்டு அமைதியாக இருங்கள். பணியிடத்தில் தடைகள் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். இன்று கூடுதல் பணிச்சுமை காணப்படும். இன்று அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடின உழைப்பை நம்ப வேண்டும். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் அதிகரித்து காணப்படும். அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...