வரலாற்றில் இன்று (02.03.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வரலாற்றில் இன்று | Today History in Tamil
மார்ச் 2 கிரிகோரியன் ஆண்டின் 61 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 62 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 304 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார்.
1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார்.
1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார்.
1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1797 – இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது.
1807 – அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது.
1815 – கண்டி ஒப்பந்தம் என வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டதை அடுத்து இலங்கை முழுவதும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[1] சிறை பிடிக்கப்பட்ட விக்கிரம ராசசிங்கன் என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
1823 – தமிழ் நாடு, திருப்பெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1825 – கடைசிக் கரிபியன் கடல் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
1836 – டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1855 – இரண்டாம் அலெக்சாண்டர் உருசியாவின் பேரரசராக (சார்) முடி சூடினார்.
1859 – இரண்டு நாள் அடிமை விற்பனை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பமானது.
1882 – விக்டோரியா மகாராணி வின்ட்சர் நகரில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1896 – எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் குடியேற்ற நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
1903 – பெண்களுக்கு மட்டுமான முதலாவது உணவு விடுதி, மார்த்தா வாசிங்டன் ஓட்டல், நியூயார்க் நகரில் திறக்கப்பட்டது.
1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
1919 – முதலாவது பொதுவுடைமை அனைத்துலகம் மாஸ்கோவில் நடைபெற்றது.
1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
1935 – சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மகிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார்.
1939 – கர்தினால் இயூசினோ பசெலி பன்னிரண்டாம் பயசு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: முதலாவது செருமனியப் படைகள் பல்கேரியாவினுள் நுழைந்தன.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது அமெரிக்க மற்றும் ஆத்திரேலியப் படைகள் சப்பானியக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
1946 – ஹோ சி மின் வட வியட்நாமின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1955 – கம்போடியா மன்னர் நொரடோம் சீயனூக் பதவி விலகினார். அவரது தந்தை நொரடோம் சுராமரித் கம்போடிய மன்னராக முடி சூடினார்.
1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1958 – தி.மு.க. இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
1962 – பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1969 – பிரான்சின் துலூஸ் நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.
1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.
1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
1978 – செக் விண்வெளி வீரர் விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெயரைப் பெற்றார்.
1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.
1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.
1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
1992 – திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.
1992 – ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர்.
2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
பிறப்புகள்
480 – நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியக் கிறித்தவப் புனிதர் (இ. 543)
1810 – பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை) (இ. 1903)
1824 – பெட்ரிக் சிமேத்தானா, செக் நாட்டு இசையமைப்பாளர், இசைக்கலைஞர் (இ. 1884)
1876 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1958)
1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)
1917 – லாரி பேக்கர், இந்தியக் கட்டடக் கலைஞர் (இ. 2007)
1918 – ரஞ்சன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 1983)
1920 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)
1923 – சுந்தரிபாய், தமிழக நகைச்சுவை நடிகை
1926 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1995)
1931 – மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
1931 – அழகிரி விசுவநாதன், தமிழக எழுத்தாளர்
1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)
1940 – மம்நூன் ஹுசைன், பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவர்
1948 – ஆந்திரேய் இலிந்தே, உருசிய-அமெரிக்க இயற்பியலாளர்
1949 – தினேஷ் குணவர்தன, இலங்கை அரசியல்வாதி
1963 – வித்தியாசாகர், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1968 – டேனியல் கிரெய்க், அமெரிக்க நடிகர்
1972 – சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபர்
1980 – ரிபெல் வில்சன், ஆத்திரேலிய நடிகை
1983 – ரவி கிருஷ்ணா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1989 – நத்தலி இமானுவேல், ஆங்கிலேய நடிகை
1990 – டைகர் ஷெராப், இந்தியத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்
274 – மானி, பாரசீக இறைவாக்கினர் (பி. 216)
1835 – இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (பி. 1768)
1840 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (பி. 1758)
1920 – தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1854)
1930 – டி. எச். லாரன்ஸ், ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)
1939 – ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேய தொல்லியலாளர், வரலாற்றாளர் (பி. 1874)
1949 – சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் ஆளுநர், இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1879)
1991 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அரசியல்வாதி (பி. 1931)
2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)
2009 – ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (பி. 1939)
2016 – இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் (பி. 1940)
சிறப்பு நாள்