விலை போகாத மாடு
எருமை மாட்டிற்கு
எனக்கும்
வித்தியாசம் ஒன்றும் இல்லை
உருவம் தான் வேறு
நிலை என்னவோ ஒன்றுதான்
முகில் கனத்து
அடிக்கும் மழையில்
குளிர் கொள்ள
எருமை மாட்டிற்கு
தெரியாது …
உணர்ச்சி அற்ற தோல்
இளமை கனத்து
இன்பம் பேசும் பருவத்தில்
இருதயம் கொள்ள
தெரியாத எனக்கும்
வறட்டு தோல்தான் …
இப்பொது எல்லாம்
வாசல் தேடிக் கொண்டு இருக்கிறேன்
வாலிபம் தேடி அல்ல
வக்கத்த இந்த தோலுக்கு
உணர்ச்சி வருமா என்று …
திசை காட்டிகள் வருகின்றன
பூங் காற்று திரும்பும் என
சத்தியம் செய்கின்றன
கொஞ்சம் உணர்ச்சி கொள்கிறேன்
மறு நிமிடமே தோல் மரக்க வைக்கப்படுகின்றன
இப்போது எல்லாம்
நான் நடிக்க ஆரம்பித்து விட்டேன்
எனக்கும் உறவுகள் உண்டு என
கதை பேச தொடங்கிவிட்டேன்
எனக்கு நானே இன்பம் தேடி கொள்கிறேன்
இந்த மாடு விலை போகாததுதான்
இனியும் பேசிக் கொண்டு இருப்பதில்
எவ்வித லாபமும் இல்லை
மாடு அடிமை சந்தைக்கு பேசப்பட்டு விட்டது
இறைவன் விலை கொடுத்து விட்டால்
விடை வாங்கிவிடும் …
அப்போதுதாவது நினையுங்கள்
இந்த மாட்டிற்கும் இதயம் உண்டு என …