கேழ்வரகு பக்கோடா
கேழ்வரகு பக்கோடா கேழ்வரகில் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது. சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது. இப்போது சத்தான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு – 300 கிராம்
சின்ன வெங்காயம் – 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை – 50 கிராம்
எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு
செய்முறை : கேழ்வரகு மாவுடன் அனைத்தையும் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடாயில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் கேழ்வரகு கலவையில் இருந்து சிறிது, சிறிது உருண்டையாக எடுத்து எண்ணெயில் போடவும். வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்தால் ருசியான கேழ்வரகு பக்கோடா தயார்.