வாலன்டைன் தினம்” /“Valentine Day”
“Valentine Day”
வாலன்டைன் தினம்
என்னும் போர்வையிலே,
கூத்தடிக்க வாய்ப்பாகப்
போய்விட்ட நாள்.
பிப்ரவரி பதினாலின்
முக்கியத்துவமோ,
தங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பளிக்கும் நாள்.
இது துவங்கியது என்னவோ ரோமாபுரியில்தான்,
மூன்றாம் நூற்றாண்டில்
நடந்ததொரு நிகழ்வு,
செயின்ட் வாலேன்டைன் செய்த ஒரு குறும்புத்தனத்தால்.
உலகம் முழுவதிலும் கொண்டாடும் இந்நாள்.
இந்தியாவிலும் பரவி வரும்
காதலர்கள் நாள்,
நம் நாட்டுக் கலாச்சாரத்திற்குப் பொருந்தாத நாள்,
புறக்கணிக்க வேண்டியதொரு தேவையற்ற நாள்.
மனித காமத்தை உசுப்பி விடும் இப்பழக்கங்களினால்,
சமுதாயச் சீர்கேடு இங்கு
தொடர்கின்றது.
மேற்கத்திய நாடுகளின்
பழக்கங்களிலே,
நல்லவற்றை எடுத்துக்
கொள்வோம்,
வீண் கசடுகளைத்
தவிர்ப்போம்.
ஜாதி மத பேதமற்ற சமுதாயம்
படைக்க,
மேலை நாடுகளைப் பின் பற்றி
வாழ்வில் உயர்வோம்,
மூடப்பழக்கங்களை முறியடித்து, முன்னேற்றமடைவோம்.
தமிழ் நாட்டுப் பண்பாட்டைப் போற்றிப் புகழ்வோம்.
பி வி வைத்தியலிங்கம்