காமக் கனல்
காமக் கனல்
உலகத்தின்
படைப்பிற்கே
இது மூலம்.
இயற்கை அன்னை
துணை கொண்டு
இது இயங்கும்.
இனப்பெருக்கம்
தொடரச் செய்யும்
மாயம்
இதன் சஞ்சலத்தால்
மனித மனம்
குலையும்.
இதை வென்ற
மனிதர்களோ
மிகக் குறைவு
இதில் தோற்ற
மனிதர்கள்தான்
மிக அதிகம்
மன்மதனின்
வில் செய்யும்
ஜாலம்
இதற்குள்ளே சிக்கிக்
கொண்டால்
பெரும் துயரம்
சிவ பக்தன்
ராவணனின்
அழிவே
இக்காமக்கனல்
சூழ்ச்சி செய்த
சதியே
துறவிகளும்
முனிவர்களும்
படும் பாடு
சபலத்தால்
வந்துவிடும்
பெரும் கேடு
மேனகை போல்
வந்த இந்த
சக்தி
விசுவாமித்திரனின்
தவம் கலைத்த
யுக்தி.
மதனையெரித்து
பூசிக்கொண்ட
சிவன்தான்
நமை காக்கும்
நல்லதொரு
பகவான்.
அவனிடத்தில்
சரணடைந்தே
நாமும்
காம சக்திதனை
வெற்றிகொளல்
வேண்டும்.
மனவலிமை
துணை கொண்டு
இதை அடக்கி
ஒழுக்கம்
கடைபிடிக்கும்
நம் முயற்சி
அதில் வெற்றி காண
நாம் எடுக்கும்
நற் பயிற்சி.
பிரம்மச்சர்யம்
கடைப்பிடித்த
நம் சான்றோர்
விவேகானந்தர்
காமராசர்
அப்துல் கலாம்
ஆன்மிகம்
அரசியல்
விஞ்ஞானம்
தத்தம் துறைகளிலே
இவரடைந்த பெரும்
வெற்றி
நமக்கெல்லாம்
நல்
உதாரணமாகும்.
காய கல்ப
யோகாவைப்
பயின்று
குண்டலினி
சக்திதனை
உயர்த்தி
ஓஜோஸை
தக்க வைத்துப்
பெருக்கி
முக்தி நிலை
அடைவதுவே
நம் உயர்ச்சி
முறையாக
இதைப் பயின்று
நாமும்
பிறவிப்
பெருங்கடலை
தாண்டி
பிறவாமை
வரம் பெறுதல்
வேண்டும்.
இதில் முழு வெற்றி
நாம் காண
வேண்டும்.
ஓம்
ஓம்
ஓம்
–பி வி வைத்தியலிங்கம்