11 நாட்களில் ரூ.11 கோடி வருவாய் -அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயிலில் 11 நாட்களில் ரூ.11 கோடி காணிக்கையும் வரவும் , 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் கோயில் நிர்வகாம் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதிலிருந்து, 11 நாட்களில் 25 லட்சம் அயோத்திக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் கோயிலின் காணிக்கை மற்றும் நன்கொடை மதிப்பு ரூ.11 கோடியை தாண்டியுள்ளதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உண்டியலில் எட்டு கோடியும், ஆன்லைன் வழியாக ரூ.3.50 கோடி வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது;
கருவறைக்கு முன்னாள் உள்ள தரிசனப் பாதையில் நான்கு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், 10 கணினிமயமாக்கப்பட்ட மையங்களில் (கவுண்டர்களில்) மக்கள் படம் செலுத்துகின்றனர்.
பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மாலையில் கவுண்டர் மூடப்பட்ட பின் அறநிலைய அலுவலகத்தில் பெறப்பட்ட நன்கொடைத் தொகையின் கணக்கை சமர்ப்பிக்கின்றனர். நன்கொடை காணிக்கைகளை 11 வங்கி ஊழியர்கள் மற்றும் 3 கோவில் அறக்கட்டளை ஊழியர்கள் அடங்கிய 14 ஊழியர்கள் கொண்ட குழு எண்ணி வருகிறது.
நன்கொடை தொகையை டெபாசிட் செய்வது முதல் எண்ணுவது வரை அனைத்தும் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் நடைபெறுகிறது. ராமர் கோயிலுக்கு தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து ராம் லல்லாவை தரிசனம் செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்.