இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்1 | சதீஸ்
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனை ஆய்வு செய்யவதற்காக ஆதித்யா எல்1 விண்ணகலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலம் அதன் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆதித்யா எல்1 அதன் முக்கியமான செயலை நாளை ( ஜனவரி – 6 ) மேற்கொள்ளவிருகிறது.
சுற்றுப்பாதை சூழ்ச்சி தொடர்பான செயலை இஸ்ரோ இதுவரையில் செய்ததில்லை.
எல்1 புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த புள்ளிக்கு சென்றால் மட்டுமே ஆதித்யா சூரியனை தடையின்றி பார்க்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.