பெண்
பெண் குழந்தையா என்ற
கேள்வியுடன்
பிறக்கிறாள் பெண்
சிறுமியாய் சிறகடிக்கும் வயதில் பருவம் எய்தி
ஆச்சிரியங்களையும்
அவஸ்தைகளையும் கடக்கிறாள் பெண்
குமரியாய் படிப்பில் பதிந்து நட்புகளுடன்
மகிழ்ந்து கவலை மறக்கிறாள் பெண்
கன்னியாய் கல்யாண பந்தத்தில்
கண்ணீருடன் பிறந்த உறவுகளையும்
புண்கையுடன் புது உறவுகளையும் ஏற்கிறாள் பெண்
கணவனின் அன்பில் காலம் உறக்கம் மறந்து
வெட்கத்துடன் பெண்மையின் முழுமையை
உணர்கிறாள் பெண்
புகுந்த விட்டில் சில உறவுடன் போராடி
சில உறவுகளோடு உறவாடி
வாழ்கையை வாழ்கிறாள் பெண்
தாளாத மகிழ்ச்சியில் தாயாகி
தாய்மையின் வளர்ச்சியில் பூரித்து
மறுபிறவி எடுகிறாள் பெண்
தன்னுயிரை பாலாக்கி புகட்டும் போது
புது உணர்வில் உச்சம் அடைகிறாள் பெண்
உயிரோடு கலந்த உறவுகளே உலகம் என்று
தன்னை மறக்கிறாள் பெண்