(இன்பாவின் பொழிப்புரை
குறள் அறிவோம்
————————-
(இன்பாவின் முயற்சி புது வடிவில் )
இன்று இந்த குறளுக்கான பொழிப்புரையை என் கோணத்தில் உங்கள் முன் வைக்கிறேன் .தினமும் இது தொடரும் ..
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
திருவள்ளுவர் குமரியில் பிறந்தவர் என்ற ஒரு தகவல் உண்டு .இவர் எழுதிய குறள்கள் மதங்களுக்கு அப்பால் நின்று கருத்துக் கூறின .ஆனால் இன்று சிலர் திருக்குறளை மதநூலாக மாற்ற நினைக்கிறார்கள் .
அகரம் தான் எழுத்தின் முதல் நாடியாக உள்ளது .அகரம் இன்றி மொழி இல்லை .ஒருவனின் அடையாளமாக திகழும் மொழியின் முகவரியை சுமக்கும் விதையென, ,இப்பிரபஞ்சம் மெய்யான சக்தியில் இயங்குகிறது .சிலர் எத்தனை இறை எனலாம் ,சிலர் சக்தி எனலாம் ,சிலர் இயற்கை எனலாம் .அகரம் போல இறையும் உலகின் விதையாக உள்ளது ..
2 .கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
திருவள்ளுவரின் எழுத்துக்கள் முதலில் அங்கீகரிக்கபடவில்லை .வீதி வீதியாக திருக்குறளின் ஓலை சுவடிகளை சுமந்துக் கொண்டு சென்றவருக்கு ஏமாற்றம் தான் காத்து இருந்தது .வறுமையும் வள்ளுவனை துரத்தியது .இறந்து போகலாமா என்று நினைத்து விரக்தி அடைந்தான் .
உலகை இயக்கும் சக்தியை வீணடிக்காமல் ,அதனை காத்து ,போற்றி, அச் சக்தி இப்பிரபஞ்சத்தின் மூலமாக திகழ செய்யும் மனிதன் போற்றுதலுக்கு உரியவன் .அவ்வாறு செய்யாதவன் எக்கல்வி பெற்று இருந்தாலும் அது வீண் என்று பார்க்கப்படும்