தமிழுக்கு வணக்கம்/யாகாவராயினும் நாகாக்க
தமிழுக்கு வணக்கம்
” யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”.
ஒருவன் எதை காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவன் சொன்ன சொல்லே அவன் துன்பத்து காரணமாகிவிடும்.
இதே பொருளில் பழமொழி நானூறு பாடல்.
” பொல்லாததை சொல்லி மறைத்தொழுகும் பேதை தன் சொல்லாலே தன்னை துயர்ப்படுக்கும் – நல்லாய்! மணலூள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும் “.
மணலில் மறைந்திருக்கும் தவளையும் தன் குரலைக் காட்டுதலால் தன் வாயாலே தன்னைத் தின்போருக்கு அகப்பட்டு ஒழியும். அறிவில்லாதவன் தீயனவற்றை தனது சொல்லால் கூறி தனக்கான துன்பத்தை தேடிக் கொள்வான் என்கிறார் முன்றுறை அரையனார்.
முருக.சண்முகம்