திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு
திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ:.தவள் யாப்பினுள் அட்டிய நீர்.(1093)
என்னை நோக்கியவள், ஏதோ என்னிடம் கேட்பது போல கேட்டு நாணித் தலைகுனிந்தாள்.அந்த குறிப்பு எங்கள் அன்பு கலந்த காதல் பயிருக்கு வார்த்த நீராயிற்று.
இதே பொருளில் குறுந்தொகை பாடல்.
யாயு ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
தலைவி முதல் சந்திப்பிலே தலைவனிடம் அன்பைப் பகிர்ந்தாள்.
தலைவன், தலைவியிடம் நம்மிடையே உள்ள உறவு எவ்வாறென உணர்த்துவதாக அமைந்த இப் பாட்டின் பொருள்.
என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்?. என் தந்தையும் உம் தந்தையும் எம்முறையில் உள்ளவர்கள். இப்பொழுது பிரிவின்றி இருக்கும் யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்.
செம்மண் நிலத்திலே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையோடு அடைதல் போல அன்புடன் நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டு உள்ளதை அறிவீர்.
தலைவன் தலைவியி டம் கொண்ட அன்பு கடந்த நட்பினை கருத்தாழமிக்க உவமையுடன் மிக அழகாக குறுந்தொகையில் செம்புலப் பெயனீரார் அழகாய் பாடியுள்ளார்.
முருக.சண்முகம்