மகிழ்ச்சி தின வாழ்த்துகள்



மகிழ்ச்சி என்பது ஒரு மாயை ஆகும். சந்தோசிப்பதும் குதூகலிப்பதும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சமீபத்திய விழா ஒன்றில் நெடுங்கால முகநூல் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் என்னிடம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கீங்க போல அனுபவிங்க என்றார்
. எனது முகநூல் பதிவை பார்த்து அவருடைய மனதில் தோன்றிய எண்ணங்கள் அவை என்பதை உணர்ந்தேன். வயதாகி விட்டால் அது எல்லாம் போய் விடும் இப்பொழுதே சந்தோசமாக இருந்து விடுங்கள் என்றார். நானும் அப்படியா சரிங்க என்று வழக்கமான எனது புன்னகையுடன் பதிலளித்தேன். அவர் பார்வையில் நான் மகிழ்ச்சி யாக இருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால் நம் துன்பங்களை வெளிக்காட்டாமல் இதழில் புன்னகையுடன் வலம் வருவது பெரிய சவால் தானே அதில் நான் வெற்றி பெற்றவள் என நினைத்தேன். யாருக்கு தான் கவலைகள் இல்லை அதற்காக அதையே நினைத்து முகத்தை வாட்டமிக வைத்து கொள்வதால் மாறி விட போகிறதா. இல்லை பாவம் என்று யாரும் உதவ முன் வருவார்களா.என்ன ஒருவர் ஆனந்தமாக இருந்தால் எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது என்றே ஐயம் எழுகிறது .கேட்கவும் செய்கிறார்கள். அவர்கள் பார்வையில் சந்தோசமாக இருப்பவர்கள் எல்லாம் கவலை மில்லாத வர்கள் என்று அர்த்தம் போலும். கவலைகளை வெளி காட்டாமல் கடப்பவர்களும் உண்டு
ஆனால் ஒன்று மாற்றி ஒன்று என்று ஏதாவது பிரச்சனைகள் வரிசை கட்டி வரும் போது, அதைப் பற்றிய சிந்தனை எழாமல், எந்த வருத்தமும் இல்லாமல் எப்படி, இயல்பாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும்? பிரச்சனைகள் சூடான பானம் இல்லை அதை உற்று உற்று பார்த்து ஊதி ஊதி ஆற்றுவதற்கு.
அது ஊத ஊத பெரிதாகும் நெருப்புப் பொறியாகும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நாங்கள் எங்களுக்குப் பிடித்த நல்ல விஷயங்களை நிறுத்தாமல் இயல்பாக செய்து கொண்டிருக்கும்போது எங்களுக்குள் எழும் நிதானமும், தன்னம்பிக்கையுமே அந்த பொறியை அனைத்து எங்கள் கவலைக்கு ஒரு மருந்தாகி எங்கள் மகிழ்ச்சியை தக்க வைக்கும். பொதுவாக1+1=2 என்பது மாதிரி ஒரு பிரச்சனை நடந்தால் கவலையாகத்தானே இருக்க வேண்டும் என ஏதோ ஒரு பழக்கத்திற்கு கட்டுப்பட்டது போல் இயல்பை விட்டும் மாறி, மனம் கனத்து போவதே சரி எனத் தோன்றும்
. அதுவே வழக்காறுகள் ஆயிற்று. ஒரு சிறு பிரச்சனை என்றாலும், அது தீரும் வரை, பொழுது போக்கு, சின்ன சின்ன சந்தோஷம் என்பனவற்றை குற்றமான ஒரு தவிர்க்கப் பட வேண்டிய வியயம் என்றே பலருக்கும் நினைக்கத் தோன்றுகிறது. அவமானமோ, தோல்வியோ, நட்டமோ, அவ்வளவு தான் காற்று கூட புக முடியாதபடி சந்தோஷக் கதவுகளை சாத்தி வைத்து மிரள்கிறோம். பிரச்சனைகளையே நினைத்துக் கொண்டிருக்கும்போது, இனி என்ன செய்ய வேண்டும் என எங்கள் யதார்த்தமான மூளை வேலை செய்யாமல் நிற்க, எங்கள் உணர்ச்சிவசப்படும் மூலை, இப்படி செய்திருக்க வேண்டுமோ, அப்படி செய்திருக்க வேண்டுமோ என எங்கள் எண்ணங்களை அலை பாயச் செய்து நடந்த பிரச்சனைகளையே மனம் மீண்டும் மீண்டும் அசை போடச்செய்யும். அது போல பிரச்சனையின் மேலே எங்கள் கவனம் இருக்கலாமே தவிர பிரச்சனையை எங்களுக்குள் எடுத்துக் கொண்டால் அது எங்களையே மூழ்கடித்து விடும்.
அதனால் எந்த பிரச்சனையிருந்தாலும் எங்களை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களில் கவனத்தை செலுத்தினால் அதுவே எந்த கவலைக்கும் ஒரு தெய்வீக மருந்தாக பிரச்சனையின் தீவீரத்திலிருந்து எங்களைத் தற்காக்கும். உண்மையில் பிரச்சனையின் ஆழத்தை விட அது தரும் வலியை விட அதை சற்றேனும் இறக்கி வைக்க முயலாமல் எங்கள் மனதில் தூக்கி சுமப்பதே எங்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியற்று தவிக்க செய்கிறது. சிறு கோப்பையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்துக் கொண்டு அப்படியே சற்று நேரம் சுமந்து பார்த்தால். காற்று போல இலகுவாக இருந்த அந்த கோப்பை, நேரம் ஆக ஆக எங்கள் கைகளுக்குள் மெல்ல வலியை ஏற்படுத்தி, கைகள் கனத்து அசைவற்று போகுமளவு பாரமாகத் தெரியும்.
உண்மையில் சுமையில் இல்லை மனபாரம். மனபாரத்தில் இருக்கிறது சுமை. எனவே பிரச்சனைகளை நாம் நோக்கும் கோணத்திலே அப்பிரச்சனையின் தீர்வு தங்கியுள்ளது. நமது மனமே நமது பலமும் பலவீனமுமாகும்
. #மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்
