உலக சிட்டு குருவிகள் தினம்
சோம்பலில் சுருண்டுக்கொள்ளும் என் சுறுசுறுப்பை சொல்லாமால் சாளரம் வந்துபோகும் அந்த சிட்டுக்குருவியின் சிலுசிலுப்பில் சிலாகித்துக்கொள்கிறது என் ஒவ்வொருநாளும் \
#மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்
அன்றே நம் முண்டாசு கவிஞர் நாட்டினர் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்பதனை உணர்த்த, “காக்கை குருவி எங்கள் ஜாதி கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்குங் திசையெலாம் காமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்! “”, என்று கூறினார்
. பழந்தமிழர்களின் வாழ்கையில் ஒன்றான கலந்திருந்த இந்த சிட்டு குருவிகள் இன்று அழியும் தருவாயில் உள்ளது. சிட்டு குருவிகள் பல நூறு வருடங்களுக்கு முன்பிலிருந்தே வாழ்ந்து வருவதாக சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் வாழ்நாள் 13 ஆண்டுகள் என்றாலும், அவை பெரும்பாலும் மனிதர்களுடன் நெருங்கி வாழ்வதையே விரும்பும். விட்டு முற்றங்களில், வயல்வெளிகளில் சிதறிய தானியங்களை உண்டு, நம் வீடுகளில் கூடுகட்டி நம்மில் ஒருவராய் வாழ்ந்து வந்தது என்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு அறிய வாய்ப்பில்லை. இதுவரை 80 சதவிகிதம் சிட்டுகுருவிகள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி என போன்ற பல்வேறு வகையான குருவிகள் வாழ்ந்து வந்தன. இவைகளின் அழிவு என்பது மனிதர்களுக்கும் பேராபத்து என்பதை உணர வேண்டும். இந்த அழிவிற்கு பின்னால் இருப்பது நாமும், நமது அபிரிமிதமான அறிவியல் வளர்ச்சியும் ஆகும்.
முன்னோரு காலத்தில் மனிதர்களை விட அதிக அளவில் இருந்து வந்த சிட்டு குருவிகள் இன்று அழிவின் விழிம்பில் இருக்கும் அறிய பறவை என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.
அழிவிற்கு காரணம் அதீத ரசாயன உரங்கள், அலைபேசி கோபுரங்களின் கதிர் வீச்சுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என நமது வாழ்கை முறை இயற்கையில் இருந்து சற்று முரண் பட்டு சென்றதே ஆகும். மீட்க என்ன செய்ய வேண்டும்? அழையுங்கள், அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிகளை! மீண்டும் ஒன்றாய் வசிக்க… தினமும் நம்மால் இயன்ற கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை, நெல், போன்ற சிறுதானியங்களை கொடுப்போம்.
அத்துடன் சிறிய மண்தட்டுக்களில் அல்லது ஏதேனும் பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதன் மூலமும் இவைகளை மீட்க முடியும். அழிவின் விளிம்பில் நிற்கும் குருவிகளை பாதுகாக்க உறுதிமொழி ஏற்போம். #மஞ்சுளாயுகேஷ்
Manjula
