தமிழுக்கு வணக்கம்/நோக்குதல்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண் டன்ன துடைத்து”.
அவள் வீசிடும் விழி வேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு தானையுடன் வந்து என்னை தாக்குவது போன்று இருந்தது.
இதே பொருளை ஒத்த நாலடியார் பாடல்.
” கண் கயல் என்னும் கருத்தினால் காதலி பின் சென்றது அம்ம சிறு சிரல் – பின் சென்றும் ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் கோட்டிய வில் வாக்கு அறிந்து”.
சிறிய மீன் கொத்திப் பறவை என் தலைவியின் கண்களை கயல் மீன் எனக் கருதி தொடர்ந்து சென்றது. அப்படிச் சென்றும் ஊக்கத்துடன் முயன்றும் அவளுடைய ஒளிமிக்க புருவத்தின் வில்லின் வளைவு என்று எண்ணி கண்களை கொத்தாமல் விட்டு விட்டது.
( சிறிய மீன்கொத்தி பறவையின் பார்வையினை, தலைவியின் வேல் விழியின் அழகை நோக்கிய தலைவன், தனது தோழனிடம் தலைவியின் அழகை வியந்து கூறியது என காட்சிப்படுத்துகிறார் இப்பாடலின் நூலாசிரியர் சமண முனிவர்)
முருக.சண்முகம்,