நர்சரி குழந்தைகள் எதில் முதலிடம் பிடித்துள்ளனர்.
விளம்பரம் என்பது இன்று இன்றியமையாததாகி விட்டது. அனுதினமும் நாம் ஒவ்வொன்றையும் கடந்து கொண்டே தான் இருக்கிறோம். கவர்ச்சியென்னும் ஜரிகைப்பேப்பரில் சுற்றிகிடக்கும் இனிப்புதடவிய மிட்டாயின் ருசியைப் போன்றது விளம்பரங்கள் ஆனால் அவை அத்தியாவசியத்தில் எப்போதோ தன் மூக்கை நுழைத்துவிட்டது. பற்பசையில் இருந்து, படுக்கை வரை நீளுகிறது.
சாலையோரங்களில் வகுப்புத் தேர்வுகள் முடிவும், அட்மிஷன் ஆரம்பிக்கும் போதும் சரி நமது சாலைகளை அலங்கரிக்கும் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளியின் பேனர்களில் மாணவர்களின் முதல் வகுப்பில் வந்த புகைப்படங்கள் இருக்கும். சமீபத்தில் தமிழக அரசு மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
இதே போல் ஹைதராபாத்தில் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைவும் வகையில் பிரியா பாரதி உயர்நிலைப் பள்ளி என்ற தனியார் பேனர் அடித்து விளம்பரம் செய்துள்ளனர். அந்த பேனரில் நர்சரி எல்.கே.ஜி. யு.கே.ஜி 1ம் வகுப்புகளில் முதல் இடம் பிடித்த மாணவர்கள் என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை போட்டு பள்ளியை விளம்பரப்படுத்தியுள்ளது.
நர்சரி குழந்தைகள் எதில் முதலிடம் பிடித்துள்ளனர். பால் குடிப்பதில் முதலிடம் பிடித்துள்ளனரா? என்று நெட்டீசன்கள் கேலி செய்துவருகின்றனர். பலரும் பள்ளிகள் தவறான முன்னுதாரணத்தை மாணவர்களிடம் விதைக்கின்றனர். கல்வி முறை மாற வேண்டும் என்று கூறுகின்றனர்.