பீட்ரூட் பூரி:
பீட்ரூட் பூரி:
தேவையானவை பொருட்கள்:
ஒரு கப் கோதுமை மாவு
கால் கப் ரவை
உப்பு தேவையானஅளவு
மிதமான சூடுதண்ணீர்
பீட்ரூட் சிறியதாக இருந்தால் இரண்டு பெரியதாக இருந்தால் ஒன்று
இரண்டு தேக்கரண்டி பால் (கட்டாயம் இல்லை)
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும் (அதிலேயே தண்ணீர் இருக்கும்) பிறகு கோதுமை மாவுடன் ரவையை கலந்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்த பீட்ரூட்டை சேர்த்து பிசையும் பால் பிடிக்குமானால் இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து கொள்ளலாம் இல்லையென்றாலும் பிரவாயிலை பிறகு சிறிது சிறிது உருண்டைகளாக செய்து எப்போதும் போல் திரட்டி எண்ணையில் போட்டு வெந்தவுடன் எடுக்கவும் சுவையான பீட்ரூட் பூரி தயார். இதனுடன் வேர்க்கடலை சட்னி நல்ல ருசியாக இருக்கும்.
(குறிப்பு: திரட்டியவுடனே பூரி சுடவும்)