சமையல் குறிப்பு
· 1) தயிர் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு
வையுங்கள் .
· 2) கீரை பசுமையாக ருசியாக இருக்க வேகவிடும் போது சிறிது எண்ணையை
அதனுடன் சேர்த்து வேக வைத்தால் ருசி அருமையாக இருக்கும்.
· 3) பிஸ்கட் ரொம்ப நாள் பிரெஷாக இருக்க டப்பாக்களில் அடைத்து வைக்கும்
போது டப்பாவில் டிஷ்யூப் பேப்பரை போட்டு வைக்கவும்.
· 4) கண்ணாடி பாட்டிலில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு
வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து கழுவினால் துர்நாற்றம் ஓடோடி விடும்.
· 5) மாவில் தண்ணீர் அதிகமாய் விட்டால் சிறிது நெய் விட்டு விட்டால் மாவு
இறுகிவிடும்.
· 6) இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் கொத்தமல்லி
போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு அரைத்து சாம்பாரில்
சேர்த்தால் கூடுத்தல் சுவையாக இருக்கும்.
· 7) சுலபான வடை தயாரிக்க ஒரு சூப்பர் டிப்ஸ் , ஒரு கப் அரிசி மாவு பொடியாக
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை உப்பு
விருப்பப்பட்டால் பூண்டு இரண்டு பல் சேர்த்து சூடான பால் அல்லது
சுடுதண்ணியில் பிசையுங்கள் வடைகளாக தட்டி எண்ணையில்
பொரித்தெடுங்கள் தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி இதற்கு நல்ல
சுவையாக இருக்கும்
—
ஹேமலதா சுந்தரமூர்த்தி