“எதிக்ஸ்” என்று எதுவுமில்லாத பிக்பாஸ் சீசன் 7 ! | தனுஜா ஜெயராமன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்த டாஸ்க்கள் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. அனைவருமே கண்டெண்ட் கொடுக்கிறோம் என்ற பெயரில் வெளிப்படையாக சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இருந்தாலும்
பிக் பாஸ் வீடுகளில் விதி மீறுபவர்களை கடுமையாக தண்டித்து வருகிறார் பிக்பாஸ்.
எவ்வளவு சொல்லியும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆளாளுக்கு இஷ்டம் போல விதிமீறல்கள் செய்து வருகிறார்கள. போட்டியாளர்கள். ஏதாவது கேட்டால் கண்டன்ட் என பல்டி அடிக்கிறார்கள். விசித்ரா இந்த முறை கிச்சன் மேடையை தாண்டி குதித்து விதிமீறலில் ஈடுபட்டார். ஜோவிகா குழம்பை கிண்டியதால் சின்ன பாஸ் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.
தற்பொழுது ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரையும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் டார்கெட் செய்து வருகின்றனர். அப்படி அனைத்து டாஸ்க்களிலும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் தான் வெற்றி பெற்று வருகிறார்கள் இதனால் இரு விட்டாருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் இருந்து வருகிறது.
இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் ஐஷூ, அனன்யா இவர்களில் ஒருவர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.
எலிமினேஷனுக்கு பயந்து ஐஷூ தனது லவ் கேமை சற்று நிறுத்தி வைத்து நாடகமாடி வருகிறார். அட்சயாவுக்கும் சில பல ஐடியாக்களை கொடுத்து வருகிறார் ப்ரதீப்.
எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனில் அனைவர் வாயிலும் கெட்ட வார்த்தைகள் அதிகம் விளையாடி வருகிறது. ஹூமானிட்டி என்பதெல்லாம் மருந்துக்கும் இல்லை. போன சீசனில் அடாவடியாக பேசி அஸிம் ஜெயித்தாலும் ஜெயித்தார் , அதனால் ஆளாளுக்கு இந்த சீசனில் அடாவடியில் இறங்கி செய்து வருகின்றனர்.
பேசிக் கர்ட்டஸி எதிக்ஸ் இது குறித்தெல்லாம் யாருமே கவலை கொள்ளவதாக தெரியவில்லை. அனைவரும் தரை லெவலுக்கு இறங்கி ஆடு வருகிறார்கள்.
மாயா நான் அர்ச்சனாவை வைச்சு செய்யறேன் என்கிறார். ப்ரதீப் நான் தினேஷை வைச்சு செய்யறேன் என்கிறார்.. அவரை வீட்டை விட்டு துரத்துகிறேன். இவரை வீட்டை விட்டு துரத்துகிறேன் என ஆளாளுக்கு நாட்டாமை தான்.