உலக கோப்பை கிரிக்கெட்டில் இனி பட்டாசு வெடிக்க கூடாது- பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்
காற்று மாசுபாடு காரணமாக இனி உலக கோப்பை போட்டிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பினை செய்துள்ளார்.
மும்பையில் உட்பட பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமானது மும்பை மற்றும் டெல்லியில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கூறியுள்ளது.
மும்பை வானகடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நடந்த்து. அதில் வெற்றிக்கு பிறகு பட்டாசு வெடிப்பது என்பதை தடைசெய்துள்ளதாக சொல்லியுள்ளனர். இதையடுத்து வரும் 6ஆம் தேதி டெல்லியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 38ஆவது லீக் போட்டி நடக்கிறது.
PM 2.5 நுண்துகள் மாசுபாட்டை கணக்கில் கொண்டால் 2022ம் ஆண்டு, உலகிலேயே மிக மோசமான 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பதிலிருந்து, அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதும் ஒரு காரணமாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மும்பை மற்றும் டெல்லியில் இனி வரும் போட்டிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறியுள்ளார். காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.