நாமார்க்கும் குடியல்லோம்
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;…
ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும்.
பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன் என்பது வெளிப்படை.
ஆக பயத்தை வெல்வதும் அவனருளாலே முடியும்.
நாம் செய்ய வேண்டியது யாதெனின் அவன் பால் நம்பிக்கை.
எம் தலையை பலவாக கொய்தாலும் பயம் கொள்ளோம்.
எம் தலைவன், முதல்வன், இறைவன், உயிர், ஊன் அனைத்துமானவன் இருகின்றான் என்ற நம்பிக்கை.
மரணம் எவ்வழியில் வந்தாயினும் யாம் எவ்வாறு கொல்லபடினும் எம்மை ஆட்கொள்ள பெம்மான் இருகின்றார் என்ற நம்பிக்கை.
பயம் பூஜ்யமாக வேண்டும் என்றார் வள்ளலார் பெருமான் என்பர்.
எவ்வாறு பயத்தை பூஜ்யம் ஆக்குவது.
யாரிடமும் கேட்க வேண்டாம்.
தங்களுக்குளே எவ்வாறு என்று கேட்டு கொள்வோம்.
எல்லாமாய் இருந்து இயக்கும் எம்பெரும்மான் திருவடி தோன்றின் வேறு விளக்கம் யாரும் கூற வேண்டுமோ.
சிவ சிவ ! சிவ சிவ !
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.
திருச்சிற்றம்பலம்….