சாபக்கல்லால் சின்ன பாஸ் வீட்டுக்கு போன அட்சயா! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. இதில் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்றே யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு போட்டியாளர்கள் இதற்காகவே பிரிப்பர் ஆகி வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்போது சின்ன வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் சாபக்கல் ஒன்றை அனுப்பி யாரையாவது நாமினேட் செய்யுங்க என தனது நாரதர் கலகத்தை தொடங்கி வைத்தார். உடனே அனைவரும் கூல் சுரேஷ் முன்தினம் சொன்ன ஜோஸ்ய பாணி உண்மைகளை வன்மத்தில் வைத்து ஒருமனதாக கூல் சுரேஷை கோர்த்து விட்டனர். அதில் பிக்பாஸ் வைத்த டிவிஷ்ட்டில் சாபக்கல் சுரேஷிடமிருந்து மணி, ரவீனாவிடம் சென்று மீண்டும் சுரேஷிடம் வந்து, இறுதியாக அக்ஷயாவிடம் வந்தது.
சாபக்கல்லை பெற்ற அக்ஷயா, பெட்டி படுக்கையுடன் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு வந்து விட்டார். அவர் கல்லை கீழே வைக்கக்கூடாது, தவறுதலாக கல்லை கீழே வைத்தால் அதற்கடுத்த வாரமும் அக்ஷயாவின் பெயர் ஓட்டு போடாமலே நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறும் என்று பிக்பாஸ் கூறவே, கையில் கல்லுடன் கிச்சனில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார் அக்ஷயா.