தித்திக்கும் தீபாவளியை வரவேற்கலாமா? | தனுஜா ஜெயராமன்
தீபாவளி என்பதே ஒளித் திருநாளாகும். இந்த நாளில் எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்று மக்கள் வழிபடுவார்கள். அகண்ட தீபம், களிமண் தீபம், எல்இடி தீபம், மிதக்கும் தீபம், டெரகோட்டா தீபம் உள்பட ஏகப்பட்ட வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
காற்று மற்றும் ஒலி மாசை ஏற்படுத்தாத இந்தப் பட்டாசுகளை வந்துவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இப்போது மக்களிடையே அதிகம் தோன்றியுள்ளதால் இந்தப் பட்டாசுகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது.
லட்சுமி சிலையை வைத்து தீபாவளியின் முதல் நாளில் வழிபட்டால் இல்லம் சிறக்கும் என்பது ஐதீகமாகும்.
தீபாவளி என்றால் இனிப்புகள் இல்லாமலா. இந்தப் பண்டிகை காலத்தில் சுவையான ருசியான இனிப்பு வகைகளை வீட்டிலேயே செய்யலாம். பாசிப்பருப்பு அல்வா, ரசகுல்லா, குலாப்ஜாமூன், ஜிலேபி, லட்டு போன்ற வகைகள் அதிகம் செய்ய படுகின்றது. மேலும் அதிரசம் ,முறுக்கு , ரவா லாடு போன்ற பலகாரங்களும் அதிகம் செய்யலாம் . கடைகளிலும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
தீபாவளி தினத்தன்று நம் வீட்டுக்கு லட்சுமி தேவையை வரவேற்பதற்காக வீட்டு வாசலிலும் முற்றங்களிலும் வண்ண வண்ண ரங்கோலி கோலங்களை போடுவது பாரம்பரியமாகும்.
தீபாவளி தினத்தன்று அழகிய தோரணங்கள், பூஞ்சட்டிகள் வைத்து வீட்டில் அலங்காரங்களை மக்கள் செய்வார்கள்.