ஊழியர்களை கொத்தாக பணிநீக்கம் செய்ய உள்ள நோக்கியா! | தனுஜா ஜெயராமன்
நோக்கியா நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து தனது செலவின குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமாக இருந்த நோக்கியா தற்போது முன்னணி டெலிகாம் கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து மாபெரும் செலவின குறைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
பின்லாந்து நாட்டு நிறுவனமான நோக்கியா, சவாலான சந்தை சூழலைநிலையை எதிர்கொள்ள செலவுகளை குறைத்து, செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் 800 மில்லியன் யூரோ-வில் துவங்கி 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.2 பில்லியன் யூரோ வரையிலான செலவுகளை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த செலவின குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தான் தற்போதுள்ள 86,000 ஊழியர்களின் எண்ணிக்கை 72,000 முதல் 77,000 வரை குறைக்க முடிவு செய்துள்ளது.