லியோ சிறப்பு காட்சி – தமிழக அரசின் திருத்தப்பட்ட உத்தரவு வெளியீடு..! | தனுஜா ஜெயராமன்

 லியோ சிறப்பு காட்சி – தமிழக அரசின் திருத்தப்பட்ட உத்தரவு வெளியீடு..! | தனுஜா ஜெயராமன்

லியோ படத்திற்காக விடியற்காலை காட்சிகள் கிடையாது. காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி போட வேண்டும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முந்தைய நாள் இரவு அதாவது 18-ம் தேதி இரவு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகளை திரையிடலாமா? என படக்குழு திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் “லியோ ”
படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் சார்பில், ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு ‘லியோ’ படத்தை 19-ம் தேதி வெளியிட உள்ளோம். அதற்காக 19-ம் தேதி மட்டும் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை அரசு கவனமாக பரீசிலனை செய்ததன் அடிப்படையில் ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) சிறப்புக் காட்சிகள் திரையிடலாம்” ஆனால் காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி போட வேண்டும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு. சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...