கண்டன்ட் மயமான பிக்பாஸ்.. ஸ்டேடர்ஜியை போட்டு உடைக்கும் சக போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

 கண்டன்ட் மயமான பிக்பாஸ்.. ஸ்டேடர்ஜியை போட்டு உடைக்கும் சக போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.

இந்நிலையில் நேற்று போட்டியாளர்களான மணி சந்திராவும், சரவண விக்ரமும் இணைந்து பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை கணித்து சில ஆருடங்களை கணித்து சொல்லியிருக்கிறார். அதில் ஜோவிகா, பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் எப்படி விளையாடுகிறார் என்றும் பேசி கொண்டிருக்கிறார்கள்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவும் கூல் சுரேஷும் கேமை அறிந்து விளையாடுவதாக சொல்கின்றனர்.

சின்ன பிக்பாஸ் வீட்டினர் நேற்று முழுவதும் ஸ்டைக் அறிவித்து யாருக்குமே சோறு கிடையாது என குண்டை தூக்கி போட்டனர்.

அதனால் பொங்கி எழுந்த பெரிய வீட்டு போட்டியாளர்கள் பெரிய பாஸிடம் முறையிட்டனர். ஆனால் பெரிய பாஸ் அதை கண்டு கொள்ளவேயில்லை. கடைசியில் இரு வீட்டாருமே ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் வீட்டிலுள்ள பழம் ஸ்நாக்ஸ் என அனைத்தையும் லபக்கினார்கள். ஆனால் பட்டினியாக இருப்பதாக காட்டிக்கொண்டனர்.

இறுதியாக சரவணன் சின்ன பிக்பாஸ் தோழர்களுக்கு கைகொடுப்பதாக உறுதியளித்த நிலையில் ஸ்டைக் வாபஸ் பெறப்பட்டு எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

இந்த முறை போட்டியாளர்கள் பலர் வாய் வார்த்தையில் கண்டன்ட் என்ற வார்த்தை பலமுறை புழங்கி நிகழ்ச்சியின் செயற்கை தன்மையினை பார்வையாளருக்கு உணரவைக்கின்றனர். எல்லாமே கண்ட்ன்ட் என அவர்களே ஒருவருக்கொருவர் பறை சாற்றி கொள்கிறார்கள்.

நாமினேஷன் , தலைவர் பதவி மற்றும் தங்கள் ஸ்டேடர்ஜி குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசி கொள்கிறார்கள். ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் மற்றவர்கள் கருத்து என்கிற பெயரில் மொத்தத்தையும் போட்டு உடைக்கிறார்கள்.

பிரதீப் ரவீணாவை பார்த்து லவ் கண்டன்டா என கேட்கிறார். நெக்சன் ப்ரதீப் ஸ்டேடர்ஜியை மொத்தமாக காலிசெய்கிறார். பதிலுக்கு ப்ரதீப் நெக்சன் ஸ்டேடர்ஜியை புட்டு புட்டு வைக்கிறார்.

மாயா, பூர்ணிமா, விஐய், விஷ்ணு இவர்களுக்கு வேலையே அனைவரின் ஸ்டேடர்ஜியை கட்டுபிடிப்பது தான். அவர்கள் அதிகம் டார்கெட் செய்வது ஜோவிகாவை.

இப்படி அவர்களே அவர்களை வைத்து செய்தால் வார இறுதியில் கமலுக்கும் பார்க்கும் நமக்கும் என்ன வேலை என குழப்பமாக இருக்கிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...