இன்றைய ராசி பலன் (14 அக்டோபர் 2023 சனிக்கிழமை)

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை 14.10.2023,சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.57 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. இன்று பிற்பகல் மாலை 05.54 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் : புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை, பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.

ரிஷபம் : காலையில் சற்று உடலும் மனமும் சோர்வாக இருந்தாலும் போகப் போக உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரித்துக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். விநாயகர் வழிபாடு நன்று. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம் : விளையாட்டாக வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல கமிஷன் பெறுவீர்கள். நீங்கள் கேட்ட பொருளை வெளிநாட்டில் இருந்து உங்கள் நண்பர் மூலம் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எல்ஐசி பாலிசி எடுப்பீர்கள். சம்பள உயர்வு பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.

கடகம் : பகல் இரவு பார்க்காமல் குடும்பத்திற்குப் பாடுபடுவீர்கள். மனைவி எடுத்தெறிந்து பேசுவதால் மனம் துன்பப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை செய்யும்படி சகோதரரால் வற்புறுத்தப்படுவீர்கள். தேவையில்லாமல் பேசி ஊர்ப் பகையை இழுக்காதீர்கள். வார்த்தைக்கு கட்டுப்பட மறுக்கும் பிள்ளைகளால் கவலைப்படுவீர்கள்.

சிம்மம் : வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். இடம் வாங்கி மாற்றி விடுவதன் மூலம் இருமடங்கு லாபம் பார்ப்பீர்கள். உழைப்பால் உயரதிகாரிகளின் மனதைக் குளிர வைப்பீர்கள். ஆசைப்பட்ட நகைகளைப் பெண்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்க பதிவு செய்வீர்கள். ஐடி துறை ஊழியர்கள் அபார வளர்ச்சி அடைந்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

கன்னி : வயிற்றுக் கோளாறால் பயணத்தை தள்ளிப் போடுவீர்கள். வியாபாரத்திற்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கைக்கு வர தாமதமாவதால் வீட்டு வேலையில் சுணக்கத்தை காண்பீர்கள். சகோதரர் திருமணத்திற்கு பண உதவி செய்வீர்கள். வேலைப்பளு காரணமாக ஐடி ஊழியர்கள் டென்ஷன் ஆவீர்கள்.

துலாம் : எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதன் காரணமாக கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

விருச்சிகம் : நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தாய்வழிச் சொத்தை விற்பனை செய்வீர்கள். உங்களுக்கு உரிய பங்கு கைக்கு வந்து வீட்டு வேலைகளை முடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவி பெறுவீர்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள் அதிக லாபம் அடைவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். கையிருப்பை உயர்த்துவீர்கள்.

தனுசு  :   புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத லாபம் தேடுவீர்கள். வியாபாரப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். காதலி கேட்ட நகையை வாங்கி கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள். கோயில் திருப்பணிக்கு பண உதவி செய்து அந்தஸ்தை அதிகரிப்பீர்கள்.

மகரம் : நாக்கும் வாக்கும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். ஆத்திரப்பட்டுப் பேசி உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அதிக பயன் அடைய மாட்டீர்கள். சகோதர சகோதரிகளுக்காக விரயச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் சற்று சறுக்களை சந்திப்பீர்கள்

கும்பம் : எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை எதிர்நோக்குவீர்கள். வெயிலின் கொடுமையால் உடல்நிலையில் பாதிப்பு அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்றுவீர்கள். முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். உங்களின் ஆத்திரத்தை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டமம் நாள்.எச்சரிக்கை தேவை.

மீனம் : வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்குவீர்கள். பழைய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல் செய்வீர்கள். வியாபார மந்த நிலையால் கவலைப்படுவீர்கள். பைனான்ஸ் தொழிலில் சிரமத்தை எதிர் நோக்குவீர்கள். ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால் பணியை இழப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!