போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை | தனுஜா ஜெயராமன்

 போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை | தனுஜா ஜெயராமன்

1867-ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும். 1956-ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின்படியும்

ஒவ்வொரு பத்திரிக்கை. வெளியீட்டாளரும் – தங்கள் பத்திரிக்கை இதழ்களின் ஒரு பதிப்பை,

அந்தப் பத்திரிக்கை வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்திய பத்திரிக்கை பதிவாளருக்கு தபாலிலோ – நேரிலோ வழங்க
வேண்டும். இல்லாவிட்டால்
சட்டப் பிரிவின்படி ரூ2 ஆயிரம் அபராதம் விதிக்க வழி வகுக்கும்.

தொடர்ந்து பத்திரிக்கை இதழை சமர்ப்பிக்காவிட்டால் பத்திரிக்கை உரிமத்தை சஸ்பென்ட் செய்யவும். ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது.

இனி வரும் காலங்களில்
பத்திரிக்கை இதழ் வெளியீட்டாளர்கள் தங்கள் பதிப்புகளை அருகில் உள்ள
தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் – இயங்கும்
பத்திரிக்கை தகவல் பீரோ (PlB)
R.N.I மண்டல அலுவலகத்தில் குறிப்பிட்ட காலக்
கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு – புதுவையில் வெளியாகும் பத்திரிக்கைகள் சென்னை சாஸ்திரி பவனில்
உள்ள RNI அலுவலகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும்.

RNI பதிவு பெற்ற பத்திரிக்கைகள் முறையாக வெளிவருகிறதா என்றும் ஒழுங்குபடுத்துவதற்காகவும், போலி பத்திரிக்கைகளை தடுப்பதற்காகவும். மத்திய அரசு இந்த அவசர உத்தரவினை
பிறப்பித்துள்ளது. தி

னசரி பத்திரிக்கைகள்
10 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு
மாநிலம் முழுதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில்
உள்ள கடைகளில்
தினசரி குறைந்தது
300 பிரதிகள் விற்பனையாகும்
பத்திரிக்கைகளுக்கு மட்டும்தான் PRESS என்ற அங்கீகாரம் வழங்க வேண்டும்.

அதே சமயம் இந்திய அரசின் பத்திரிக்கை விற்பனை சான்றிதழ் ஆடிட் ரிப்போர்ட் சமர்ப்பித்தால்தான்
PRESS என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...