அமித்ஷாவுடன் சந்திரபாபு மகன் சந்திப்பு… சூடுபிடிக்கும் ஆந்திர தேர்தல்..!

 அமித்ஷாவுடன் சந்திரபாபு மகன் சந்திப்பு… சூடுபிடிக்கும் ஆந்திர தேர்தல்..!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அம்மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறைக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யக் கோரி அக்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாய் இருப்போம் என நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சமீபத்தில் அறிவித்தது. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாக பவன் கல்யாண் அறிவித்தார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான கிஷன் ரெட்டியுயும் உடனிருந்தார். ஆந்திர சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக – தெலுங்கு தேசம் கட்சியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து நாரா லோகேஷ் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்போதே தனது தந்தையையும் கொசுவை வைத்தே கொலை செய்ய திட்டதிமட்டுள்ளதாகவும் தனது தந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தை அமித் ஷாவிடம் கொண்டு சென்றுள்ளார் நாரா லோகேஷ். ஆனால் சந்திரபாபு நாயுடு மீதான நடவடிக்கைக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...