ரவீணா & மணி சந்திரா காதலிக்கிறீர்களா? விசித்ரா கேள்வி! | தனுஜா ஜெயராமன்
மெளனராகம் 2 சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் சின்னத்திரையில் பல நண்பர்களும் உள்ளனர். நடனக் கலைஞர் மணிசந்திரா இந்த சீசனில் டஃப் போட்டியாளராக இருப்பார் என பார்த்தால், எந்நேரமும் ஜாலியாக ரவீணா பின்னாடியே திரிந்து வருகிறார்.
நேற்று ரவீனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டாட்டம் நடைபெற்றது. பிக்பாஸ் கூட ரவீணாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ரவீணாவுக்கு மணி நெருங்கிய நண்பராக இருந்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் விசித்ரா, யூகியிடம் ஆசி பெற்று மகிழ்ச்சியானார் ரவீணா. பிக்பாஸ் வீட்டில் ரவீனா பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
ரவீனா பிறந்தநாள் மற்றும் மணி இருவரும் நட்புடன் நெருங்கிப் பழகுவதை பார்த்து விசித்ரா இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேட்கின்றார். ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
காலையில் லியோ படத்தில் இருந்து நா ரெடி தான் பாடல் முதல் நாளில் போடப்பட்ட நிலையில், ரவீனா தாஹா பாடல் முடிவில் மணிசந்திராவின் இடுப்பில் ஏறி அமர்ந்த காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. 19 வயதான ரவீனா வெளியே மணிசந்திராவுடன் சுற்றி வந்த நிலையில், உள்ளேயும் மணிசந்திராவை சுற்றி வருகிறார். ரவீனாவை மணிசந்திராவின் சேட்டை தொடர்ந்து வரும் நிலையில், அவர் இடுப்பில் ஏறி அமர்வது, கையை கடித்து விளையாடுவது என ரவீனா தாஹா செய்து வரும் நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.