வைரலாகும் நீயா நானா கோபிநாத் வீடியோ! பிக்பாஸ் மோதலுக்கு பதிலடியா? | தனுஜா ஜெயராமன்

 வைரலாகும் நீயா நானா கோபிநாத் வீடியோ! பிக்பாஸ் மோதலுக்கு பதிலடியா? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா விசித்ரா மோதல் வைரலான நிலையில் , இருவரின் மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் நீயா நானா கோபிநாத்தின் பழைய மேடை பேச்சு வீடியோ ஒன்று அதற்கு பதிலடியாக வைரலாகி வருகிறது.

வீடியோவில் “படிக்காதவன் தான் சாதித்திருக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என ஒரு 10 பேரை சொல்லுவார்கள். 11-வது ஒரு ஆளை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். ஏன்னா எவனும் கிடையாது. படிக்காம ஜெயிச்ச 10 பேரை நீங்க சொன்னா, படிச்சு ஜெயிச்ச 10 லட்சம் பேரை நான் சொல்லுவேன். படிப்பு ரொம்ப முக்கியம்.

உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது. எழுதி வச்சிக்கோங்க இன்னும் ஒரு வருஷத்துல நீட் தேர்வுல நம்ம பையன் தான் டாப்ல வருவான். படிக்காம ஜெயிச்சவங்க லிஸ்ட்ல நம்ம பர்ஸ்ட் சொல்றது காமராஜரை தான். அவர் படிக்காதவராக இருந்தாலும் அவர் ஏன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

படிக்காத என்னாலயே இவ்ளோ செய்ய முடியுதே படிச்சவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்று காமராஜர் கண்ட கனவினால் தான் இன்று இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள்.
வறுமையில் இருந்தாலும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்கிற பெற்றோர் இருக்குற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். சோசியல் மீடியால படிப்பு ஒன்னுமே கிடையாதுனு சொல்றவன நம்பாதிங்க அவனெல்லாம் மக்குப்பய. படிப்பு என்பது மார்க் சம்பந்தப்பட்டது அல்ல. படிப்பு தான் சமூக நீதியை சொல்லிக் கொடுத்திருக்கிறது. படிப்பு ஒரு ஆயுதம்” என கோபிநாத் ஆக்ரோஷமாக பேசிய பேச்சு தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்த மோதலுக்கு தக்க பதிலடியாக இருப்பதாக நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...