கல்வி முக்கியமா? இல்லையா? பிக்பாஸில் சூடு பிடித்த விவாதம்! (DAY-5) | தனுஜா ஜெயராமன்
ஜோவிகாவின் படிப்பு குறித்து விசித்திரா பேசியதாக விவாதங்கள் சூடு பறந்தது பிக்பாஸ் வீட்டில்..12-ம் வகுப்புவரை படிப்பது அவசியம் என்றும் அதனால் அதனை கூறியதாக தெரிவிக்கிறார் விசித்ரா.
அதனை தொடர்ந்து பேசிய ஜோவிகா எல்லாரும் படிச்சுதான் பெரிய ஆள் ஆகனும்னு இல்ல, படிப்பால நிறைய குழந்தை பாதிக்கவும் படுறாங்க அதுக்குதான் நான் இங்க வந்துருக்கேன் என்று பேசிய போது அதற்கு நிக்சன், ரவீணா என பல ஹவுஸ்மேட்ஸ்கள் கைதட்டி வரவேற்பை அளித்தனர். இதனை பார்த்த விசித்ரா இன்னும் ஆக்ரோஷமாக “தமிழ்ல ஒரு வார்த்தை எழுதுவியாடி நீ” ப்ளைட் டிக்கெட் புக் பண்ண தெரியுமா? என ஆவேசமாக கத்தினார்.
அதற்கு ஜோவிகா ப்ளைட் டிக்கட் புக் செய்ய ஏஜென்ஸி உண்டு. தெரியலைன்னா உதவி கேட்டு பண்ணலாம் ஆனா படிப்பு வர்லைன்னா செத்து போக கூடாது என பதிலடி கொடுத்தார்.
இந்த படிப்பு விஷயம் பொதுவெளியில் கூட பெரும் சர்ச்சையை கிளறி உள்ளது.
ஜோவிகா சொல்வது எனக்கு படிப்பு வர்லை. விசித்ரா சொல்வது எல்லோரும் 12வது வரை படிப்பது அவசியம் என்பது. பவா சொல்வது படிப்பு எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது என கமலையும் காமராஜரையும் உதாரணம் காட்டுவது சிறுபிள்ளை தனம். எல்லாராலும் இவர்களாகி விடமுடியுமா?
விசித்ரா மற்றும் ஜோவிகா சொல்வதை கூட ஒரு வகையில் அவரவர் நியாயம் என ஏற்கலாம்.
அதில் பவா சொல்ல வருவது எல்லாம் அபத்தங்களின் உச்சம்.
சனிக்கிழமை கமலஹாசன் முன்னிலையில் நிச்சயமாக இந்த விஷயம் பெரும் விவாதமாகும். விஐய் டிவி நிர்வாகமும் கமலும் இந்த சென்சிடிவ் விவகாரத்தை எப்படி கையாளப் போகிறார்கள் என பார்க்கலாம்.