பசுமைப் புரட்சி நாயகன்”
பசுமைப் புரட்சி நாயகன்”
சாமி போல வந்த எங்கள் சுவாமிநாதன்,
மக்கள் பசி தீர்த்து உயிர் காத்த சுவாமிநாதன்.
வேளாண்மை விஞ்ஞானி எங்கள்
சுவாமிநாதன்,
விண்ணுலகப்
புகழ் தொட்ட
சுவாமிநாதன்.
IPS பதவியை
உதறித்
தள்ளி,
உணவு உற்பத்தியில் புரட்சி செய்த சுவாமிநாதன்.
கோதுமையும் நெல் மணியும் நம் உணவாதாரம்
அதன் தட்டுப்பாட்டை தகர்த்தெரிந்த
சுவாமிநாதன்.
TNAU
உலகுக்களித்த சுவாமிநாதன்
நார்மன் போர்லாகின் நல் நண்பன் சுவாமிநாதன்.
குட்டை ரக கோதுமையை அறிமுகம் செய்து
“தீவிர விவசாயம்”
கற்றுத்
தந்து
பஞ்சாபை
இந்தியாவின்
களஞ்சியமாக்கி
வரவிருந்த
பஞ்சத்தைத்
துரத்திய வீரன்.
மகசூலை அள்ளித்
தரும் நெல்
வகைகள்
பல கொணர்ந்து பக்குவமாய் பயிர்
செய்ய
சாகுபடி
வழிமுறைகள் சொல்லித் தந்த
உற்பத்தி நாயகன் எங்கள் உழவனின்
நண்பன்.
கிராமப்
பொருளாதார
மேம்பாட்டிற்கு
அங்கு வாழும் பெண்களின்
நல் வாழ்விற்கு
பாடுபட்ட
இம்மாமேதை சுவாமிநாதன்
சாதித்த
சாதனைகள் மிக
பிரம்மாண்டம்.
மான்கொம்பு சாம்பசிவம்
சுவாமிநாதன்
எனும் எங்கள்
MS Swaminathan அய்யாவேதான்
இந்தியா ஒரு
வல்லரசாய் திகழ்வதற்கு
பெரும் காரணமென்றால்
அது மிகையாகாது.
இவர் வாங்காத பட்டமில்லை விருதுகளில்லை .
எனினும் பண்போடு பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தார்.
இவ்விந்திய
விவசாயப் புரட்சி
வேந்தன்
பத்ம விபூஷண விருது பெற்ற நம் வேளாண் தந்தை
இன்று நம்மிடையே உயிருடன் இல்லை
எனினும்
அவர் தந்த வழிகாட்டுதல்கள்
இந்திய நாட்டை
உணவு உற்பத்தியில் முன்னிலையில் நிறுத்தும்
என்று அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியும்.
அவரை இன்று
பெருமையாக நினைவு கூறும்
அவர் அபிமானிகளில் ஒருவன்
பி வி வைத்தியலிங்கம்