காந்தி ஜெயந்தி பாடல்தேசத் தந்தையேஎண் சீர் விருத்தம்

 காந்தி ஜெயந்தி பாடல்தேசத் தந்தையேஎண் சீர் விருத்தம்

காந்தி ஜெயந்தி பாடல்
தேசத் தந்தையே
எண் சீர் விருத்தம்
**
(மா காய் மா காய்)
(மா காய் மா காய்)
**

  1. தேசத் தந்தையே
    தேசத் தந்தையே
    தேசம் யாவுமே
    போற்றும் தந்தையே! வேச மற்றதோர்
    வீரத் தந்தையே
    வீறு கொண்டநீ
    விடிவின் தந்தையே! நாச காரியம்
    நாட்டில் விஞ்சவே
    நாட்டை ஆண்டதால்
    ஆங்கி லேயரின் வாசம் போக்கவே
    வாட்டம் தீர்க்கவே
    வாய்மை வழியையே
    ஏற்ற தந்தையே!
  2. வீட்டை மட்டுமே
    விரும்பி டாமலே
    விடிவு நாட்டிலும்
    காண எண்ணியே தீட்டு சொல்லியோர்
    தீமை மாற்றவே
    திருப்பம் தந்தநீ
    அகிம்சை அண்ணலே! கேட்டை நீக்கவே
    கேண்மை கூட்டவே
    கீழ்மை ஓட்டினாய்
    கேடும் கெடுகவே! சூட்டும் செய்கையாய் சூதும் தூர்க்கவே சோர்வு மாற்றினாய் ராட்டை நூற்றுமே!
  3. சத்தி யத்தையே
    சாட்சி யாக்கியே
    சகத்து வாழ்க்கையை
    அமைத்த தந்தையே! கத்தி யின்றியே காக்கும் தன்மையாய் காவல் காட்டினாய் காலம் முழுதுமே! தத்தி நின்றநம் தாய கத்திலே தானை வந்துமே தர்மம் வென்றதே! அத்து மீறலும் ஆட்டம் காணவே ஆசு நீத்தநீ அண்ணல் காந்தியே!
  4. பிறந்த நாளிலே
    பெருமை பேசுவோம்
    பிரிவு என்றசொல்
    பேதம் போக்குவோம்! மறந்த காரியம்
    மனத்தில் கொண்டுமே
    மானி டத்தையே
    மதித்து வாழுவோம் சிறந்த பிள்ளையாய் சினத்தை விலக்கியே சிறப்புச் சேரவே செகத்தை மாற்றுவோம்! கறந்த பாலிலே
    கருமை தோன்றுமா?
    காந்தி வாழ்க்கையைக்
    கருத்தில் கொள்ளுவோம்!

…முனைவர்
பொன்மணி சடகோபன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...