புதுக்கோட்டையில் புது வீடு கட்டிய பிக் பாஸ் தாமரை…

 புதுக்கோட்டையில் புது வீடு கட்டிய பிக் பாஸ் தாமரை…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரைச்செல்விக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை என பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு கட்டி வரும் வாரம் பால் காய்ச்சவே போகிறாராம். தெருக்கூத்து கலைஞராகவும் நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் வேஷம் கட்டி வந்த தாமரைச்செல்வி பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றார். சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு நடுவே சாமானிய மனிதராக கலந்து கொண்ட தாமரைச்செல்வி விளையாடத் தெரியாது விளையாடத் தெரியாது என்று சொல்லியே கடைசிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை மற்றவர்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து கற்றுக் கொண்டு சிறப்பாக விளையாடி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு கட்டத்தில் அந்த சீசன் டைட்டில் தாமரைச்செல்வி என்றாலும் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் அவருக்கு அதிக அளவில் ஓட்டுக்களையும் போட ஆரம்பித்தனர். ஆனால் கிராண்ட் ஃபினாலேவுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் 19 நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரைச்செல்வி அதிரடியாக போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்த பின்னர், தனது கணவருடன் இணைந்து கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தினார்.

ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரைச்செல்வி விஜய் டிவி விட்டு வெளியேறுவாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்து சின்னத்திரை நடிகையாகவே மாறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த பலர் நல்ல வருமானத்தை ஈட்டி செட்டில் ஆன நிலையில் தாமரைச்செல்வி தற்போது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள A.மாத்தூரில் புதிதாக வீடு கட்டி குடியேறப் போவதாக அழைப்பிதழை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு அனைவரும் வருக என அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17-ஆம் தேதி தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமரைச்செல்வி புதிதாக வீடு கட்டிய நிலையில் அவரது ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த சக போட்டியாளர்கள் என பலரும் தாமரைச்செல்வியை வாழ்த்தி வருகின்றனர். தாமரைச்செல்வியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிக் பாஸ் பிரபலம் ஐக்கி பெர்ரி பங்கேற்க உள்ளதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்கு வந்த தாமரைச்செல்வி தற்போது புதிதாகவே சொந்த வீடு கட்டி இருப்பது மகிழ்ச்சி என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இப்படிக்கு நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...