சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு…

 சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு…

பிரபாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபுருஷ், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அவரது நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால், தற்போது சலார் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

பான் இந்தியா ஹீரோ பிரபாஸ், தற்போது ப்ராஜெக்ட் கே எனப்படும் கல்கி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் கமல், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பிரம்மாண்டமாக உருவாகும் கல்கி, அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே பிரபாஸ்ஸின் சலார் திரைப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

கேஜிஎஃப் படங்கள் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல், சலார் படத்தை இயக்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. பிரபாஸ் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் சலார் படத்தை, ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரபாஸுக்கு வில்லனாக மலையாள ஹீரோ பிருத்விராஜ் நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் சலார் படத்தில் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள சலார், செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. கேஜிஎஃப் போலவே இந்தப் படமும் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கொடுக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இந்தப் படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ட்ரெய்லர் வெளியாகாததால், சலார் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படலாம் என பேச்சுகள் அடிபட்டன.

அதனை படக்குழுவினரே தற்போது கன்ஃபார்ம் செய்துள்ளனர். VFX உள்ளிட்ட சில கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால், சலார் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஹோம்பலே ஃபிலிம்ஸ் தனது டிவீட்டர் பக்கத்தில் அபிஸியலாக அறிவித்துள்ளது. அதில், “சலார் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், எதிர்பாராத சூழலால் சலார் திரைப்படம் சொன்னபடி செப்டம்பர் 28ம் தேதி வெளியாகாது.

முழுமையான சினிமா அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதனால் வேறு வழியின்றி சலார் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை சலார் உடன் இணைந்திருங்கள் என தெரிவித்துள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சலார் திரைப்படம் நவம்பர் 10ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...