2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள்
2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்று!
முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற்றது.
30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.50 கோடி பேர் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 2 கோடி பேர் உயிரிழந்தனர். அதாவது ஒட்டுமொத்தமாக 97 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒரு கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர்.
ஏறத்தாழ, 15 லட்சம் இந்திய வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் 74 ஆயிரம் பேர் பலியாகினர்.
குதிரைப்படை, யானைப்படைகளைக் கொண்டு, போர் நடத்திய வீரர்கள், முதன் முதலாக நவீன ஆயுதங்களை பயன்படுத்தி போரிட்டனர்.
இந்த போரில் முதல் முறையாக விமானம்தாங்கி கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப் போரில் பீரங்கி பொருத்தப்பட்ட டாங்குகளை ஆண் டாங்கிகள் என்றும், இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட டாங்கிகளை பெண் டாங்கிகள் என்றும் அழைத்தனர்.
முதலாம் உலகப் போரின்போது ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு தகவல்களை அனுப்ப, ராணுவ வீரர்கள் நாய்களையும், புறாக்களையும் பயன்படுத்தினர்.
முதலாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கு 30 பில்லியன் டாலர்கள் செலவானது.
முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆஸ்ட்ரோ ஹங்கேரியன், ஜெர்மன், ரஷ்யன் மற்றும் ஒட்டோமன் சாம்ராஜ்யங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன.
முதலாம் உலகப் போரில் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடாக ரஷ்யா இருந்தது. அந்நாட்டுப் படையில் 12 மில்லியன் வீரர்கள் இருந்தனர்.
முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் அமெரிக்கா, மிகப் பெரிய ராணுவ வல்லரசாக மாறியது.
இப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அந்நாடு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
முதலாம் உலகப் போரில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.