பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி
பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர்.
இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான்.
இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார்.
இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான்.
அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், தண்டாயுதபாணி என்று பெயர் பெற்றார்.
பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார்.
இத்தகைய சிறப்பு மிக்க, அறுபடை வீடுகளில் ஒன்றான இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
இதில் பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் நின்றபடி காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர். இதனால் முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
தற்போது பொது தரிசன பக்தர்களின் வசதிக்காக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களை போல பொது தரிசன பக்தர்களுக்கு இனி அமர்ந்து சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம்.பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.