நூற்றாண்டின் சிறந்த படம்.. அணுகுண்டின் தந்தை டாக்டர்ஓபன்ஹெய்மர்

 நூற்றாண்டின் சிறந்த படம்.. அணுகுண்டின் தந்தை டாக்டர்ஓபன்ஹெய்மர்

.. நூற்றாண்டின் சிறந்த படம்.. ஓபன்ஹெய்மர்

கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான Oppenheimer படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான ப்ரீமியர் ஷோவை பார்த்து விட்டு ஒட்டுமொத்த பார்வையாளர்களும் இந்த பிரம்மாண்ட படத்தை பற்றிய தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வாரம் ஹாலிவுட்டில் இரண்டு பெரிய படங்களின் கிளாஷ் நடைபெற உள்ளது. அதில், ஒன்று மார்கட் ராபி நடித்த என்டர்டெயின்மெண்ட் படமான பார்பி மற்றொரு படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள ஓபன்ஹெய்மர்

இரண்டு படங்களின் ப்ரீமியர் காட்சிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களே குவிந்துள்ளன. அதிலும், ஓபன்ஹெய்மர் படத்தை பார்த்த ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களே வாயடைத்துப் போயுள்ளனர்.

கிறிஸ்டோபர் நோலன் படம்: மெமென்டோ, தி டார்க் நைட், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டன்கிர்க், டெனெட் என கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் தரமான சம்பவமாக அமைந்த நிலையில், விரைவில் வெளியாக உள்ள ஓபன்ஹெய்மர் படம் அணுகுண்டின் தந்தை டாக்டர் ஓபன்ஹெய்மரின் பயோபிக் படமாக உருவாகி உள்ளது.

எப்போதுமே சிஜி காட்சிகளை பெரிதும் விரும்பாமல், ரியாலிட்டியாக டெனெட் படத்தில் ஒரு நிஜ ஏரோபிளேனையே கட்டிடத்தில் இடிக்கவிட்டு படமாக்கிய கிறிஸ்டோபர் நோலன் இந்த படத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்து படமாக்கி கதிகலங்க வைத்துள்ளார்.

அணுகுண்டு எனும் அரக்கன்: இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகஸாகி மீது அமெரிக்கா போட்ட அணுகுண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. முதல்முறையாக அந்த அணுகுண்டை தயாரிக்கும் பணியில் மான்ஹாட்டனில் ஈடுபட்ட டாக்டர் ராபர்ட் ஓபன்ஹெய்மர் பற்றிய படமாகவே இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கி உள்ளார்.

பாம் பிளாஸ்ட் காட்சிகள் எல்லாம் படமாக்குவது என்ன ஜுஜுபி மேட்டர். அதுதான் சிஜி இருக்கே, ஒரு இடத்தில் வெடிப்பது போல செய்து விட்டு, சிஜியிலேயே அனைத்தையும் செய்து விடலாமே என நினைப்பவர்களுக்கு கிறிஸ்டோபர் நோலன் நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். அதன் நிஜ வலியையும் நிஜ உணர்வையும் அப்படியே திரையில் படமாக கடத்தப் போகிறேன் என சிஜி காட்சிகளே பயன்படுத்தாமல் இந்த படத்தை இயக்கி உள்ளதாக ரசிகர்களும் பிரபலங்களும் பிரமிப்பின் உச்சத்தில் வாயடைத்து போய் உள்ளனர்

இந்த நூற்றாண்டின் சிறந்த திரைப்படம் ஓபன்ஹெய்மர் என டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்ட் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய பால் ஸ்க்ரேடர் தனது முதல் விமர்சனத்தை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார்.

மேலும், படத்தை பார்த்த பல பிரபலங்களும் ஓபன்ஹெய்மர் படம் கிறிஸ்டோபர் நோலனின் வாழ்நாள் சாதனை என கொண்டாடி வருகின்றனர். அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓபன்ஹெய்மர் அதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து அறிந்ததும் அதை தடுக்க எப்படி எல்லாம் போராடினார் என்பது குறித்தும் அணு ஆயுதம் உலக மக்களை நொடிப் பொழுதில் அழிக்கும் அரக்கன் என்பதையும் அதனை பயன்படுத்தவே கூடாது என்கிற கருத்தை முன் வைக்கும் படமாகவே இந்த படம் உருவாகி இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...