நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – தனுஜா ஜெயராமன்.

 நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு  –  தனுஜா ஜெயராமன்.

ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

வழக்கமான ஹாரர் ஜானர் படங்களில் இருந்து இந்த ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார் ஆஹா வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா.

ஹாரர் படம் போல அல்லாமல் காமெடி படம் எடுப்பது போல ஜாலியாக வேலை பார்த்தோம். அழகான அனுபவமாக மாற்றித் தந்த படக் குழுவுக்கும், ஆஹாவுக்கும் நன்றி..” என்றார் நவீன் ஜார்ஜ்.

நடிகை மோனிகா பேசும்போது, “இந்த ’சிங்க்’ படத்தில் நடிக்க என்னைத் தேர்ந்தெடுத்த படக் குழுவுக்கு நன்றி! ஆஹாவும் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ‘சிங்க்’ மிகவும் ஆர்வமூட்டும் திரைக்கதையாக இருக்கும். படம் பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

இயக்குநர் விகாஸ் ஆனந்த் பேசும்போது, “நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் இது என்பதால் பட்ஜெட்டில் நிறைய விஷயங்கள் காம்ப்ரமைஸ் செய்தோம். நாங்கள் திட்டமிட்ட நேரம் தாண்டி படப்பிடிப்பு போனால்கூட நாங்கள் எங்களுக்குள் பேசி குறைந்த நாட்களிலேயே படத்தை முடித்து விட்டோம். எங்களது திறமைக்கு ஆதரவு கொடுத்துள்ள ஆஹாவுக்கு எங்களது நன்றி” என்றார்.

நடிகர் கிஷன் பேசும்போது, “என்னுடைய முதல் படமான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. ’சிங்க்’ படத்திற்காக இயக்குநர் விகாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இந்த படமும் பட்ஜெட்டும் சின்னதாக இருக்கலாம். ஆனால், நிறைய கனவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அந்த வகையில் இது பெரிய படம்தான் என்றார் கிஷன்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...