மாவீரன் வசூல் இவ்வளவா? – தனுஜா ஜெயராமன்.

 மாவீரன் வசூல் இவ்வளவா? – தனுஜா ஜெயராமன்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படம் ‘மாவீருடு’ என வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...