வசூலில் கலக்கிய போர் தொழில் எந்த ஒடிடியில் எப்போது தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.

 வசூலில் கலக்கிய போர் தொழில் எந்த ஒடிடியில் எப்போது தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.

நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் போர்த்தொழில். சைக்கோ த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகச்சிறந்த ஆதரவை தந்ந்திருந்தனர். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

போர் தொழில் திரைப்படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்திற்கு அதிகமான பிரமோஷன்கள் எதுவும் செய்யப்படாத நிலையில், படம் மற்றவர்களின் பாராட்டிலேயே அதிகமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு கவர்ந்தது. போன வாரமே ஒடிடியில் படம் வெளியாக இருந்த நிலையில் திரையரங்கில் இன்னும் படம் ஒடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒடிடி வெளியீடு தள்ளிப் போனது.

இந்த நிலையுல் இம்மாதம்28ம் தேதி பல மொழிகளில் இந்தப் படம் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற போர்த்தொழில் படம், ஓடிடியிலும் அதிகமான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக நடிப்பது என்றால் சரத்குமாருக்கு மிகவும் பிடித்தமான நிலையில், இந்தப் படத்தில் மிடுக்கான போலீஸ் உயரதிகாரியாக அவர் சிறப்பாக நடித்துள்ளார். அசோக் செல்வனும் மிகவும் அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

குறைந்த பட்ஜட்டில் எடுக்கபட்ட ஒரு நிறைவான படம் சோனி லைவ்வில் கண்டு மகிழலாம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...