கலைஞர் பேனா நினைவுச் சின்னம் || அனுமதி கிடைக்குமா?

 கலைஞர் பேனா நினைவுச் சின்னம் || அனுமதி கிடைக்குமா?

சென்னை மெரினா கடலில் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி கேட்டுள்ளது. இறுதி அனுமதி வழங்குவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏப்ரல் 17ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் CRZ (Coastal Regulation Zone) அனுமதி தேவைப்படும் திட்டங்களைப் பற்றி விவாதிக்க 14 உறுப்பினர்களைக் கொண்ட EAC (Expert Appraisal Committee) அதன் 325வது கூட்டத்தைக் கூட்டவுள்ளது. மாநிலப் பொதுப்பணித் துறை (PWD- State’s Public Works Department) சமர்ப்பித்துள்ள மெரினா கடற்கரையில் வங்காள விரிகுடாவில் ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்’ கட்டுவதற்கான முன்மொழிவு இந்த நிகழ்ச்சி நிரலில் அடங்கும்.

பேனா நினைவுச் சின்னம் CRZ IV(A), CRZ I(A) மற்றும் CRZ II பகுதிகளில் வருவதால், 2.11 ஏக்கர் நினைவுச்சின்னம், ஒரு பேனா பீடம், ஒரு பாதசாரி நடைபாதை, ஒரு லேட்டிஸ் பாலம் மற்றும் ஒரு நிலத்தடி அருங்காட்சியகம் ஆகியவற்றை உள்ளடக்கியதற்கு CRZ அனுமதி தேவைப்படுகிறது. தமிழ்நாடு மாநிலக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (Tamil Nadu State Coastal Zone Management Authority -TNSCZMA) ஒப்புதல் அளித்த பிறகு, பேனா நினைவிடத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான திட்டத்தை PWD சமீபத்தில் அனுப்பியது.

TNSCZMA ஏப்ரல் 5ஆம் தேதி திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அதே நேரத்தில் * CRZ I(A) பகுதியில் ஆமைகள் உட்பட அனைத்து கடல் விலங்கினங்களும் மணல் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லத் தெளிவான பாதையை எளிதாக்குவதற்கு எந்தத் தூண்களும் அமைக்கப்படக் கூடாது என்று நிபந்தனைகளை விதித்தது;

* ஆமை கூடு கட்டும் காலத்தில் கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது;

* மற்றும் CRZ I(A) மற்றும் CRZ IV(A) பகுதிகளில் ஆமை கூடு கட்டும் காலத்தில், கட்டுமான மற்றும் செயல்பாட்டுக் கட்டங்களில் வெளிச்சம் இல்லை.

கடலில் நினைவுச்சின்னம் அமைப்பதால் மீனவச் சமூகம் பாதிக்கப்படாது என அரசு அதிகாரிகள் கூறி வரும் நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்துக் கவலை தெரிவித்ததுடன்,

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளில் கடல்மட்ட உயர்வு மற்றும் திட்டப் பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான காரணிகள் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இன்றைய கூட்டத்திற்குப் பின் விரிவான அறிக்கை வரலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...