ஹைதராபாத் பயணம் – ஐந்தாம் நாள் – ஜப்பானிய தோட்டமும் ஒற்றைக்கால் கொக்கும் 

 ஹைதராபாத் பயணம் – ஐந்தாம் நாள் – ஜப்பானிய தோட்டமும் ஒற்றைக்கால் கொக்கும் 

முரசு எழுப்பி வண்ணமயமான ஆட்டங்களுடன் ஓபனிங் செர்மனி, மூவி மேஜிக் மூலம் படம் தயாரித்தல் எப்படி? நேரடி விளக்கம், இரவு நேரத்தில் வண்ண விளக்குகளுடன் மக்களின் கூட்டம், ஜப்பானிய தோட்டமும், ஒற்றைக்கால் கொக்கும்  ஹைதராபத்தில் ஐந்தாம் நாள் பயண அனுபவம். 

நண்பர்களே ஐந்தாம்  நாள் காலையில் 6 .40 மணிக்கெல்லாம் ராமோஜி பிலிம்சிட்டி நோக்கி எங்களது பயணத்தை துவக்கினோம். காலை 7. 25 மணிக்கு எல்லாம் ராமோஜி பிலிம் சிட்டியில் அடைந்துவிட்டோம். அங்கே உள்ளே எட்டு முப்பது மணிக்கு தான் டிக்கெட் கொடுப்போம் என்று தெரிவித்தார்கள்.

 ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது என்றால் முதல் நாளே புக் செய்து கொள்ள  வேண்டும் என்று தெரிவித்தார்கள். எனவே நாங்கள் உள்ளே காலை உணவு சாப்பிடுவோம் என்று கேட்டோம். காலை உணவுக்கு சாப்பிடுவதற்கு அங்கேயே விலை மிக அதிகமாக இருந்தது. எனவே நாங்கள் வெளியே இருந்த ஒரு ஹோட்டலில் எங்களது காலை உணவை முடித்துக்கொண்டோம்.

 தோசை, பூரி, சப்பாத்தி போன்றவை அங்கே எங்களுக்குப் பரிமாறினார்கள். விலை சாதகமானதாக அமைந்திருந்தது. மீண்டும் எட்டு இருவது மணிக்கெல்லாம் வரிசையில் நின்று டிக்கெட்டை பெற்றுக்கொண்டு முதலாவது ஆளாக அங்கு இருந்து 8 கிலோமீட்டர் தாண்டி உள்ள ராமோஜி பிலிம்சிட்டி அடைந்தோம்.

மிகப்பெரிய மலை, மிகப் பெரிய காடு, மலைகளின் நடுவே, காடுகளின் இடையே நாங்கள் ராமோஜி பிலிம் சிட்டியில் எட்டு கிலோமீட்டர் பேருந்தில்  பயணித்து அடைந்தோம். அங்கே காலையில் இலவசமாக (நாம் காசு கொடுத்து விட்டோம்)  ஆனால் அவர்கள் அதை கம்பிளிமெண்டரி என்று தெரிவித்து பல்வேறு விதமான விளையாட்டுகளில் நம்மளை விளையாட அனுமதி அளிக்கின்றனர்.

காலை  9 45 மணிக்கு சரியாக ஓபனிங் செர்மனி நடைபெறும் என்று தெரிவித்தார்கள். அதனை நாங்கள் காண ஆவலுடன் 8 .50 மணி முதல் தயாராக இருந்தோம். சரியாக 9. 45 மணிக்கு ஓப்பனிங் செர்மனி   நடைபெற்றது.

பாகுபலியில் வருவது போன்று இரண்டு பெரிய கதவுகள் திறக்கப்பட்டு,  அதில் இருந்து பெரிய முரசுகளில் சப்தம் எழுப்பி  நடனமாடும் மங்கைகளும், ஆண்களும் நடனம் ஆடுகின்றனர். மிக அருமையான டான்ஸ் நடைபெற்றது.

 பிறகு டான்ஸ் முடிந்தவுடன் உள்ளே செல்கிறோம். முதலில் தெலுங்கில் ஆன பாடலுக்கு டான்ஸ் நடைபெற்றது. உள்ளே குபேரர் சிலையுடன் இருக்கக்கூடிய இடத்தில் மீண்டும் இந்தி பாட்டிற்கான டான்ஸ் நடைபெற்றது. அதனையும் நாங்கள் கண்டுகளித்து விட்டு உள்ளே சென்றோம்.

 உள்ளே செல்லும் பொழுது முதலாவதாக என்ன இருக்கிறது என்றால்  ஒரு பிலிமிற்கு  எவ்வாறு படங்கள் எடுக்கப்படுகின்றன  என்பதை நம்மை ஒரு சிறு வாகனம் வைத்து உள்ளே அழைத்துச் சென்று காண்பிக்கிறார்கள். மிக நீண்ட க்யூ நிற்கின்றது. ஆனால் விறு விறு என்று உள்ளே அனுமதித்து விடுகின்றார்கள்.

அடுத்து  நமக்கு ராமோஜி பிலிம் சிட்டியில் மூவி மேஜிக் தொடர்பான பிலிம் மேக்கர் எவ்வாறு படம் தயாரிக்கப் படுகிறது என்பது தொடர்பான ஒரு விளக்க காட்சி நடைபெறுகிறது. அது மிகவும் அருமையாக இருக்கிறது.  நம்மையே அதில் பங்கேற்க வைக்கின்றனர். 

நம்மில் மூன்று பேரை அழைத்து ஹீரோவாக மாற்றி நடிக்க வைக்கின்றனர்.  மொத்தம் நான்கு அறைகள் உள்ளே இருக்கின்றது. முதல் அறையில்  ஒரு டைரக்டர் வந்து விளக்குகிறார்.இரண்டாவது அறையில் பல்வேறு விதமான சப்தங்கள் மிக எளிதாக எவ்வாறு எழுப்பப் படுகிறது என்பதை விளக்குகின்றனர்.

இவர்கள் பின்பு அதை ஒரு முழுநீள படமாக நமக்கு காண்பிக்கின்றார்கள். படம் தயாரிப்பது என்பது மிகவும் எளிதாகவும், சில நேரங்களில் கடினமாகவும் இருப்பதை அங்கே நமக்கு தெளிவாக விளக்குகிறார்கள்.

அந்த ஷோ முடிந்தவுடன் அடுத்த மூன்றாவது ஷோ  ஸ்டண்ட் படம் எவ்வாறு எடுக்கிறார்கள்  என்று சொல்கிறார்கள். இயல்பிலேயே நேராகத் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தத்துடன் மிக அதிகமான அளவில் அந்த அந்த நிகழ்வானது சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக நம் கண் முன்பே  நடைபெறுகிறது.

 மிகவும் ஆச்சரியமான, அதிசயமான, பரபரப்பான அந்த காட்சிகள் அங்கே நமக்கு காண்பிக்கப்படுகிறது. பிறகு அங்கிருந்து நாங்கள் நான்காவதாக  டான்ஸ் நடைபெறும் ஷோவிற்கு செல்கின்றோம். டான்ஸ் மிக அருமையாக அமைந்திருந்தது.

ஆங்கில பாடல், ஹிந்தி பாடல், தெலுங்கு பாடல் என அனைத்து பாடல்களுக்கும் அங்கே டான்ஸ் ஆடினார்கள். பல்வேறு கலைஞர்களின் நடனங்கள் மிக திறமையாக அங்கே நமக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் நம் முடிந்ததற்கு பிறகு நான்கு விதமான ஸோக்களையும்  பார்த்துவிட்டு பிறகு நாங்கள் பாகுபலி செட்டை பார்ப்பதற்காக சென்றோம்.

பாகுபலி செட்டு செல்வதற்கு அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் பேருந்தில் நம்மை  அழைத்துச் செல்கிறார்கள். பாகுபலி படத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து விதமான காட்சிகளும் அங்கு இருக்கின்றன. மிகப்பெரிய கதவு ,யானை மற்றும் வாகனங்கள்  இருக்கக்கூடிய முரசுகள், பல்வேறு விதமான அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

பாகுபலி பட காட்சிகள் செட்டிங்ஸ்  நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவற்றுடன் நாமும் போட்டோ எடுத்துக்கொண்டு அந்த இயல்புகளையும் பார்த்துவிட்டு அங்கிருந்து மீண்டும்  கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். அதாவது கிளம்பிய இடம் யுரேகா என்று தெரிவிக்கின்றனர்.

அந்த யுரேகா இருக்கும் பகுதிக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். வந்து சேர்ந்த பிறகு நம்மை டூர் பஸ் மூலம்  அழைத்துச் செல்கிறார்கள். நம்மை ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார்கள். அதில் கெய்டு நமக்கான பல்வேறு தகவல்களை விரிவாக விளக்குகிறார்.

அந்த கைடு  சில இடங்களை சொல்லிவிட்டு ஓரிடத்தில் நம்மளை இறக்கி விடுகிறார்கள். முதலாவதாக அவர்கள் இறக்கிவிட்ட இடம்  ட்ரெயின் ஸ்டேஷன் ஆகும். அங்கிருந்து  அடுத்த இடத்திற்கு அதேபோன்று பேருந்து சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கின்றது.

அந்த பேருந்தில் ஏறி நிறைய புதிய மாடி வீடுகள், கட்டடங்கள் இயற்கையோடு அமைந்துள்ள  இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார்கள். 

அங்கே பார்த்துவிட்டு அதனுடைய வெளிப்பகுதி ஏர்போர்ட் இருக்கக்கூடிய பகுதி  பார்த்துவிட்டு அடுத்த பேருந்தில் ஏறினால் அங்கிருந்து நம்மை அழைத்துக்கொண்டு  ஹவா மஹால் என்கிற இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அடுத்த இடம்  ஜப்பானீஸ் மற்றும் புத்தர்கள் இருக்கக்கூடிய பகுதியை நமக்கு நினைவு படுத்துகிறது. அங்கே அருமையான பூக்கள் தோட்டம் அமைத்து இருக்கின்றார்கள். அங்கிருந்து  ஜப்பானிய தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அது நீரூற்றுடன் மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தோட்டத்தை  பார்த்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறி அதற்கு அடுத்ததாக இருக்கக்கூடிய  பட்டர்பிளை பார்க் நம்மை அழைத்துச் செல்கின்றனர். பட்டர்பிளை பார்க்க மிகவும் அருமையாக இருக்கின்றது.

பட்டர்பிளை தொடர்பாக பல்வேறு தகவல்களை அதில் விரிவாக விளக்கி விட்டார்கள். நாம் படங்கள் எடுப்பதற்கு மிக நன்றாக இருக்கின்றது. பறவைகளுடன் படங்கள் எடுத்துக்கொண்டு , கொக்குகள் இயல்பாக இருக்கும் காட்சிகளையும் நாம் பார்க்க முடிகிறது.

நம் அருகிலேயே கொக்குகள் வந்து நம்மை தொட்டுவிட்டு செல்வது போன்று பக்கத்தில் வந்து விட்டுச் செல்கின்றன. கண்கொள்ளா காட்சியை நாம் மிக அருமையாக அங்கே காணமுடிகிறது. அங்கு ஒரு அருவி  ஏற்பாடு செய்துள்ளார்கள். குளிக்க முடியாது. ஆனால் கண்களால் மிக இயல்பாக நம்மால் பார்க்க முடியும்.

அங்கிருந்து நாம் வெளியே வரும்பொழுது  பல்வேறு விதமான பறவைகளும் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பறவைகள்  அனைத்தையும் நாம் பார்க்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார்கள். பறவைகள் மிக அழகாக சத்தமிட்டு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. பறவைகள் மிகப் பெரிய அளவில் வளர்ந்து இருக்கின்றன.

அங்கிருந்து நாம் செடிகள் அதிகம் வளர்ந்திருக்கும் பூந்தோட்டத்தில் நாம் நம்முடைய பாதை வருகின்றது. ஆனால் அனைத்து இடங்களுக்கும் நடந்தே செல்லவேண்டும். நடந்து,நடந்து  நமது கால்கள் வலிக்கும் அளவிற்கு சென்று விடுகின்றது. 

அங்கிருந்து நாம் நடந்து சென்றால் பல்வேறு விதமான  குகைகளை காண முடிகிறது. அந்த குகைகளில் நாம்  மட்டும் நடப்பது போன்று இருக்கின்றது. அங்கே பல புதிய விஷயங்களை வைத்திருக்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சப்தங்கள் எழுப்பி எழுப்பி நம்மை பயமுறுத்தும் வகையில் பல்வேறு விதமான அமைப்புகளை உள்ளே வைத்து உள்ளனர்.

ஆனால் அதனை நாம் முதலாவதாக பார்க்க வேண்டும். நாங்கள் மாலை 6 மணிக்குத்தான் உள்ளே சென்றோம். அதனால் இருட்டும் பகுதியாக இருந்தது பிறகு வெளியே வந்தால் டான்ஸ் ஆடிக் கொண்டே ஒரு அருவியில் குளிப்பது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். அங்கே பலரும் பல்வேறு விதமான பாடலுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

 வெளியே வந்து பார்த்தால் ஒரு மிகப்பெரிய ஆலமரம். அந்த மரத்தில் தொடர்ந்து வண்ணம் விளக்குகளால்  அடிக்கடி நிறம் மாறிக்கொண்டே இருப்பது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள் . அதுவும் பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது.

இரவு நேரத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள வண்ண விளக்குகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பிருந்தாவன் போன்ற ஒரு அமைப்பு – அது முழுவதும் வண்ண விளக்குகளால் செய்யப்பட்டுள்ளது . அது போன்று பல்வேறு இடங்களும் வண்ண விளக்குகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கிருந்து நாம் மிகப் பெரிய கூட்டத்தின் நடுவே வரிசையில் நின்று ராமோஜி பிலிம் சிட்டியில் என்ற நுழைவு பகுதியை  மீண்டும் வந்து அடைந்தோம்.

இந்த ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள உணவுகள் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு சமோசா 30 ரூபாய் .ஒரு டீ 30 ரூபாய். சாப்பாடு 330 ரூபாய் 350 ரூபாய் என்றாலும் பஃபே சிஸ்டம் தான் .ஒருவர் மட்டும் தான் அவருக்கு வேண்டியதை சாப்பிடும் வகையில் வைத்திருக்கின்றார்கள்.

இருந்தாலும் பல்வேறு விதமான விஷயங்களை அங்கே செய்து உள்ளனர் .ஆனால் இவ்வளவு பெரிய வனப்பகுதியை தனியார் சொத்தானது எப்படி என்பது  மிகப் பெரிய கேள்விக்குறியாகவே எங்கள் கடைசிவரை இருந்தது.

இந்த இடங்களைப் பார்த்துவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பி நேராக சார்மினார் பகுதியை அடைந்தோம். சார்மினார் பகுதியை இரவு நேரத்தில் மிகப்பெரிய கூட்டம் இருந்தது.  வண்ண விளக்குகளுடன் சார்மினார் பகுதியை இரவு நேரத்தில் பார்க்க அருமையாக இருந்தது. 

நாங்கள் சார்மினார் பகுதியை பார்த்து ரசித்தோம். பிறகு அங்கிருந்து வழக்கம்போல் ஒன்பதே முக்கால் மணிக்கு எங்கள் அறையை அடைந்தோம். இந்த நாள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறலாம்.

ஐந்தாம் நாள் பயணம் இத்துடன்  முடிவடைந்தது. அடுத்ததாக ஆறாம் நாள் பயணத்தை பார்ப்போம்.

(பயணம் தொடரும்) 

எம்.எஸ்.லட்சுமணன், காரைக்குடி 

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...