இன்னும் 4 விருதுகளைப் பெறுகிறது ‘மாமனிதன்’

 இன்னும் 4 விருதுகளைப் பெறுகிறது ‘மாமனிதன்’

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘நைட் ஆஃப் த ரீல்’ எனும் திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம், ‘சிறந்த குடும்பத் திரைப்படம்’, ‘சிறந்த ஒளிப்பதிவு’, சிறந்த தொகுப்பு’, ‘சிறந்த பெண் நட்சத்திரம்’ என நான்கு விருதுகள் மாமனிதன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது, தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் நட்சத்திரக் கலைஞர் காய்த்ரி சங்கர் ஆகியோர் பெறுகின்றனர்.

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி இணைந்து தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை நான்காவது முறையாக இணைந்து பணியாற்றிய படம் ‘மாமனிதன்’.

ஒரு மனிதன், அவனுக்குள் இருக்கும் மனிதம். இதுவே மாமனிதன்! அதைப் பார்ப்பவர்களுக்குக் கடத்தும் முயற்சியில் இந்தப் படத்தை எடுத்துள்ளார் சீனு ராமசாமி.

ஆட்டோர் ஓட்டுநராக வரும் விஜய் சேதுபதி, தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். அதிகம் படிக்காத அவர், தன் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்காக விஜய் சேதுபதி எடுக்கும் ஒரு முடிவு அவரின் வாழ்க்கையை சிக்கலாக்கிவிடுகிறது. எதிர்பாராதவிதமாக பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி தன்னுடைய சொந்த ஊர், குடும்பம் என அனைத்துவிட்டு ஓடி தலைமறைவாகிறார். அவர் எங்கு சென்றார்? திரும்ப வந்தாரா? என்பது மீதி கதை.

இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி காயத்திரி நடத்திருந்தனர். இளையராஜா யுவன் சங்கர்  ராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். ரஜினிகாந்த். ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் ‘மாமனிதன்’ படத்தைப் பாராட்டியிருந்தனர்.

டோக்கியோ திரைப்பட விருதுகள் 22-ல் மாமனிதனுக்கு சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான விருது கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. மாமனிதன் படத்தில் நடித்ததற்காக தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். மேலும் விமர்சகர் விருது (ciritc choice), சிறந்த சாதனைக்கான விருது (outstanding achievement award) என்ற இரண்டு பிரிவுகளில் இயக்குநர் சீனு ராமசாமிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பூட்டான் நாட்டில் நடைபெற்ற ட்ருக்  (Druk) சர்வதேச திரைப்பட விவில் சிறந்த சர்வதேசத் திரைப்படம் சிறிந்த குடும்ப்படம் சிறந்த இயக்குநர் சிறந்த நடிகர் என நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்தது.

தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற ‘நைட் ஆஃப் த ரீல்’ எனும் திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது இயக்குநர் சீனு ராமசாமிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாமனிதன் இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...