B.K.அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது
இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபிப் பாடத் திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் அரபி மொழித்துறை தலைவராக பேராசிரியர் B. K. அப்துல் ஹாதி பணியாற்றி வருகிறார். இவர் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் அரபிப் பாடத் திட்டக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த இரு பல்கலைக்கழகங்களில் பாடக்குழு உறுப்பினராக இருப்பதைப் பாராட்டி இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மிகவும் இளம் வயதில் இந்தப் பொறுப்பை இவர் இரண்டு பல்கலைக்கழகங்களிலும் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்ததற்காகக் கல்லூரித் தலைவர், செயலர், ஆட்சி குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரபி மொழித்துறை மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதன் மூலம் இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாதனை விருதை இளம் வயதில் பெற்ற தமிழகத்தின் முதலாவது அரபி மொழித்துறை தலைவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.