அறுபதாண்டு வரலாற்று ஆவணம்

 அறுபதாண்டு வரலாற்று ஆவணம்

சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியவர் வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன். பல்வேறு கட்டங்களில் பல்வேறு படைப்பாளிகளின் சமூகவிரோதத் தாக்குதல்களைக் கண்டித்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் சிகரம் செந்தில்நாதன். அவர் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றி வருகிறார். அந்த மூத்தப் படைப்பாளிக்கு நடத்திய சீர்மிகு விழாவில் அவரது 80 வயது நிறைவை ஒட்டி ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் :  பாதை – பயணம் – படைப்புலகம்’ என்கிற சிறப்பு மலர் வெளிடப்பட்டது.

எழுத்தாளர் வே. குமரவேல் தொகுத்து சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் 28.10.2022 மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் அரங்கில் நடைபெற்றது.

எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், திரைப்பட விநியோகிஸ்தர், தயாரிப்பாளர், மார்க்சிய தத்துவ அறிஞர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எனப் பல தளங்களிலும் முத்திரைப் பதித்தத் தோழர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் அவர்களுக்கு 28.10.2022 அன்று 81வது பிறந்த நாள் விழாவும் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் : பாதை – பயணம் – படைப்புலகம்” நூல் வெளியீட்டு விழாவை த.மு.எ.க.ச. தென் சென்னை மாவட்டம் நடத்தியது.

இந்த விழாவில் நீதியரசர் ஏ. கே. இராஜன்  தலைமை தாங்கினார்.   நீதியரசர் கே. சந்துரு நூலை வெளியிட நூலின் முதல் பிரதியை இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.)  தலைவர் தோழர் அ. சௌந்தரராஜன் பெற்றுக் கொண்டார். நீதியரசர் து. அரிபரந்தாமன்  வாழ்த்துரை வழங்கினார்.‌

இந்த விழாவில் ஸ்டாலின் குணசேகரன், நாடகவியலாளர் பிரளயன், பத்திரிகையாளர் மயிலை பாலு உள்ளிட்ட பல இலக்கிய ஆளுமைகள் உரையாற்றினர்.‌

அரங்கு நிறைந்த கூட்டத்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இரவு 8.30 மணிக்கு உணவு வழங்கப்பட்டு விழா இனிதே நடைபெற்றது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...