மக்கள் பணியில் PACHE அறக்கட்டளையின் சிறந்த தொண்டு

 மக்கள் பணியில் PACHE அறக்கட்டளையின் சிறந்த தொண்டு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் PACHE அறக்கட்டளை (People’s Association for Community Heath Education Trust) சார்பில் மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி நடந்த அன்று உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பெண் சிசுவதை நடந்த காலகட்டத்தின் பின் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, பின் நிறுத்தப்பட்டன. ஆனால் PACHE அறக்கட்டளை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது.

இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற வீடுகளில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து படிக்க வைத்து அதன் அனைத்துச் செலவுகளையும் பார்த்துக் கொள்கிற ஒரு மகத்தான செயல்பாட்டை இவர்கள் செய்து வருவது மிக முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்குப் பாதுகாப்பும் அரவணைப்பும் தந்து உதவுவதோடு கிராமங்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துவருவது உண்மையில் பாராட்டத்தக்கதாக இருந்தது.

அங்கே புதிதாகத் தத்தெடுக்கப்பட்ட குழந்தை முதல் குழந்தை பெற்ற தாய்மார் வரையிலான வயதுடையவர்களும் கலந்துகொண்டனர். இந்த இருதரப்பட்ட வயதினரும் இந்த அறக்கட்டளையால் வளர்க்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என்பதே இதன் சிறப்பு.

இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் திரைப்பட பாடலாசிரியர் ஏகாதசி. அவரிடம் பேசினோம்.

“இந்த நிகழ்ச்சியில் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசினேன். செவிமடுத்த அறக்கட்டளையின் பயனாளிகளான முந்நூருக்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளைஞிகளும் சிறுவர்களும் மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களும் என் பேச்சில் நெகிழ்ந்ததாகக் கூறினர். ஆனால் அவர்களின் கடந்த காலமும் வாழ்வும் என் நெஞ்சை நனைத்தது.

நான் எத்தனையோ மேடைகளில் பேசியிருந்தாலும் இந்த நிகழ்வு எனக்கு நெகிழ்வான ஒன்றாகப்பட்டது. இதன் நிறுவனர் மரியாதைக்குரிய மனோகரன் அவர்களும் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பால்பாண்டி அண்ணன் அவர்களும் எனக்கு கால் நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிமுகம். இந்த அறக்கட்டளையில் சிறிது காலம் பணிபுரிந்திருக்கிறேன். அன்று அதே அறக்கட்டளையின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பேரானந்தம்.

நான் ஏற்கெனவே PACHE அறக்கட்டளையில் பணிபுரிய நேர்முகத் தேர்வு ஒன்று அப்போது நடந்தது. அதில் மனோகரன் அவர்கள் என்னிடம் ஒரு பழமொழி கேட்டார். நான், “கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் கூத்தாடி கிழக்கே பார்ப்பான்” என்று சொல்லியிருந்தேன். அதை ஞாபகம் வைத்துக்கொண்டு இந்தக் கூட்டத்திலே அவர் சொன்னதில் அந்த மனிதனை நினைவாற்றலை எண்ணி வியந்தேன்” என்றார் கவிஞர் ஏகாதசி.

சமூக சுகாதாரக் கல்விக்கான மக்கள் சங்கம் (PACHE – People’s Association for Community Heath Education Trust) அறக்கட்டளை என்பது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பணிபுரியும் கிராமப்புற அடிப்படையிலான லாப நோக்கற்ற அமைப்பாகும். PACHE ஆனது,

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்பின் வலுவான வைராக்கியம் கொண்ட ஒத்த எண்ணம் கொண்ட தனிநபர்களின் குழுவால் தொடங்கப்பட்டது PACHE.

இந்தியா மற்றும் வெளிநாடுகளின் ஆதரவின் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒரு தொகுதியிலிருந்து மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள ஆறு தொகுதிகளில் பலதரப்பட்ட செயல்பாடுகளில் தனது பணியை விரிவுபடுத்தியுள்ளது.

அறக்கட்டளையின் நிறுவனர் பி.மனோகரனிடம் பேசினோம்.

“இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், மக்களிடையே உள்ள ஏழைமை நிலையை அவர்களின் சொந்த விடுதலை மற்றும் அதிகாரமளித்தல் நோக்கி உயிரூட்டுவது, ஊக்குவிப்பது மற்றும் அணிதிரட்டுவது ஆகும்.

குழந்தைகள், பெண்கள் மேம்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆகியவை அமைப்பின் நோக்கம்.

இந்த அமைப்பு முக்கிய திட்டங்கள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நெகிழ்வுத்தன்மை, கூட்டுப் பொறுப்பு மற்றும் நேர்மை போன்ற ஜனநாயகக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகிறது.

மேலும் நன்கு நிறுவப்பட்ட திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (PME) ஆகியவற்றுடன் அறங்காவலர் குழு மற்றும் ஆலோசனைக் குழுவால் நிர்வகிக்கப்படுகிற அமைப்பு.

PACHE அறக்கட்டளையானது STD / HIV / AIDS தடுப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் ஆதரவை உள்ளடக்கிய பணித் துறையில் தேவையான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட 64 திறமையான மற்றும் ஆற்றல்மிக்க பணியாளர்களைக் கொண்ட குழுவைக் கொண்டுள்ளது.

PACHE குடும்பத்தில் 64 ஊழியர்கள், 295 சக கல்வியாளர்கள், 13,680 உறுப்பினர்களைக் கொண்ட 912 சுய உதவிக் குழுக்கள், சமூகப் பராமரிப்பு மற்றும் ஆதரவிற்கான 8 வீட்டுப் பராமரிப்பு வழிகாட்டிகள் மற்றும் 10 சமூக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். மற்றும் அனைத்து பகுதிகளிலும் தன்னார்வலர்களின் வலுவான இருந்து, அமைப்பின் முன்முயற்சிகளுக்கு உதவவும் ஆதரிக்கவும் உதவுகின்றனர்” என்றார் அறக்கட்டளையின் நிறுவனர் மனோகரன்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...