அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

 அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

ஹிந்திப்பட கதாநாயகன் அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ்ப் பதிப்பின் முன்னோட்டம் வெளி யாகியிருக்கிறது.

அமீர்கான் புரொடக்ஸன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர் கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப் பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையச் செய்வதற்கான அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தைத் தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் இந்தியில் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது. அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாபாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங் கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வைத் தாங்கியிருக்கும் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர் கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.  

உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்குப் பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களைத் தேர்ந் தெடுத்து வழங்கி வருகிறது. இந்தப் பட்டியலில் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ வும் இணைந்திருக்கிறது.

ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற் கான முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் நடிகர் அமீர் கான் தமிழ் ரசிகர்களிடத்திலும் நட்சத்திர நடிகராக அறிமுகமாகி, பெரிய வரவேற் பைப் பெற்று வருகிறார்.  

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.