சசிகுமாரின் பட டைட்டில் ‘நான் மிருகமாய் மாற’ என மாற்றம்

 சசிகுமாரின் பட டைட்டில்  ‘நான் மிருகமாய் மாற’  என மாற்றம்

சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது ‘நான் மிருகமாய் மாற’. ஹரிப்ரியா கதா நாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வருகிறது.

விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து IT.D.ராஜா மற்றும் D.R.சஞ்சய் குமார் சார்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ‘கழுகு’ பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார்.  
இந்தப் படம் தொடங்கப்பட்டபோது ‘காமன்மேன்’ என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இதே டைட்டிலை வேறு ஒரு நிறுவனம் தங்களது படத்திற்கு முன்கூட்டியே பதிந்துவிட்ட தகவல் பின்னர்தான் தெரிய வந்தது. இதனால் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும் காமன்மேன் என்கிற டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ‘நான் மிருகமாய் மாற’ என புதிய டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...